சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிகவின் 16ம் ஆண்டு தொடக்க விழா- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம்- விஜயகாந்த்

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில் கொண்டு எதற்கும் அஞ்சாமல், எதிர்காலத்தில் நம் இலக்கை அடைய உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று தனது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விஜயகாந்த். தேமுதிக தொடங்கப்பட்டு 16ஆவது ஆண்டினை கொண்டாடுகிறது தேமுதிக. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் முன்பாகவே எதற்கும் அஞ்சாமல், எதிர்காலத்தில் நம் இலக்கை அடைய உறுதி எடுப்போம்தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் உத்வேகப்படுத்தியுள்ளார்.

தேமுதிகவின் 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் விஜயகாந்த் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.

DMDK prepares for TN assembly election - Vijayakanth cheers workers before hoisting party flag

சட்டசபை தேர்தல் 2021 வருவதற்கு இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனியாக களம் காண வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூறினார் பிரேமலதா. விஜயகாந்த் கிங் மேக்கராக இருப்பதை விட கிங் ஆக இருப்பதை விரும்பவதாக கூறியுள்ள பிரேமலதா, தேமுதிகவை கூட்டணி இன்றி தனித்து களமிறக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்றைக்கு கட்சிக்கொடி ஏற்ற வரும் முன்பாகவே நேற்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக தொடங்கப்பட்டு 16ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழக மக்களின் மனங்களில் தேமுதிகவுக்கு என்று தனி இடம் உள்ளது. கொரோனா காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் யாரும் இல்லை என்பதை உருவாக்குவதற்காகவே தேமுதிக பாடுபட்டு வருகிறது. வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் என எல்லாவற்றையும் சந்தித்து, வீறுநடை போட்டு வருகிறோம். தமிழகத்தில் யாராலும் தவிர்க்க முடியாக கட்சியாக உள்ளோம். வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில் கொண்டு எதற்கும் அஞ்சாமல், எதிர்காலத்தில் நம் இலக்கை அடைய உறுதி எடுப்போம்.

2021 சட்டசபைத் தோ்தலில் தேமுதிக அபரிமிதமான வெற்றிபெற்று, மக்கள் சேவையாற்ற வேண்டும். சட்டசபைத் தோ்தலில் வெற்றி பெற தொண்டா் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். நல்லவா்கள் லட்சியம். வெல்வது நிச்சயம் என்று அவா் கூறியுள்ளார்.

விஜயகாந்த் காலில் விழுந்த கருணாநிதி.. சுதீஷ் போட்ட கார்ட்டூன், தேமுதிகவினர் ஷாக்.. வேகமாக நீக்கினார்விஜயகாந்த் காலில் விழுந்த கருணாநிதி.. சுதீஷ் போட்ட கார்ட்டூன், தேமுதிகவினர் ஷாக்.. வேகமாக நீக்கினார்

மருத்துவ சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்கிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சியின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். மூத்த மகன் விஜயபிரபாகரனை அரசியலில் முன்னிலைப்படுத்தி வருகிறார் பிரேமலதா. விஜயகாந்த் பாணியில் அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனின் அரசியல் நடவடிக்கைகள் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதால் விரைவில் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுத்து முழுநேர அரசியல் பணியில் களமிறக்கி விடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் பிரேமலதா. தேமுதிக தனித்து களம் காணுமா? அல்லது கடைசி நேரத்தில் தங்களுக்கு வசமான கட்சியுடன் கூட்டணி சேருமா என்று பார்க்கலாம்.

English summary
DMDK prepares for TN assembly election - Vijayakanth cheers workers before hoisting party flag
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X