சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்.. தொண்டர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன எல் கே சுதீஷ்!

Google Oneindia Tamil News

சென்னை: சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார் என தேமுதிக துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே எம்எல்ஏ ஜெ அன்பழகன், எம்பி வசந்தகுமார், மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி உள்ளிட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்துவிட்டனர்.

இந்த நிலையில் விஜயகாந்திற்கு வழக்கமான உடல் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை செத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

அதில் அவருக்கு கொரோனா இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்கே சுதீஷ் கூறுகையில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என தெரிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேதனை

வேதனை

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் கட்சியின் நிலைப்பாடு குறித்து அவரது கட்சி தொண்டர்களும் நடுநிலையாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தனர்.

சுதீஷ்

சுதீஷ்

தற்போது நாளை அவர் வீடு திரும்புவார் என சுதீஷ் கூறியதால் தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். விஜயகாந்த் வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட விரும்புகிறார்கள். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது.

English summary
DMDK President Vijayakant will discharge from Miot hospital by tomorrow, says LK Sudeesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X