சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிராமங்கள் வளர்ச்சி பெற... தேமுதிகவை ஆதரியுங்கள்... விஜயகாந்த் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை மற்றும் வரும் 30-ம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் அவரவர் போட்டியிடும் சின்னங்களில் வாக்களித்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நான் மோடியின் ஃபேன்.. அவரை கடவுளாகவே பார்க்கிறேன்.. புளகாங்கிதத்துடன் பேசும்.. சிலை வைத்த சங்கர்!நான் மோடியின் ஃபேன்.. அவரை கடவுளாகவே பார்க்கிறேன்.. புளகாங்கிதத்துடன் பேசும்.. சிலை வைத்த சங்கர்!

முரசு சின்னம்

முரசு சின்னம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிடுவதாகவும், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சின்னங்கள்

சின்னங்கள்

மேலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் போட்டியிடும் சின்னங்களில் வாக்களித்து மக்கள் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் எந்த இடத்திலும், இரட்டை இலை, மாம்பழம், தாமரை என கூட்டணிக் கட்சி சின்னங்களை விஜயகாந்த் குறிப்பிடவில்லை என்பது தான். முரசு சின்னத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ள விஜயகாந்த் கூட்டணி கட்சி என வரும் போது அவரவர் போட்டியிடும் சின்னங்கள் என்பதோடு முடித்துக்கொண்டார்.

அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள்

ஊராட்சிகளில் தலைவர், கவுன்சிலர் என யாரும் இல்லாததால் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் உள்ளதாகவும், கிராமங்கள் வளர்ச்சி பெற தேமுதிகவுக்கு வாக்காளர்கள் ஆதரவை தர வேண்டும் என விஜயகாந்த் தனது அறிக்கையின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதிக்கட்டம்

இறுதிக்கட்டம்

மேலும், நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜயகாந்திடம் இருந்து இந்த வேண்டுகோள் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. இது வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி இந்த வழிமுறையை கையாண்டுள்ளது.

English summary
dmdk president vijayakanth asks support to his party candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X