சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடுமையாக உழைத்த கட்சி பாமக.. ஒன்னுமே செய்யாமல் இருப்பது தேமுதிக.. பிரேமலதாவுக்கு பேராசை கூடாது!

எதுவுமே செய்யாமல் 7 சீட்டுகள் என்பது தேமுதிகவுக்கு பேராசை என்பதையே காட்டுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எப்பவுமே இப்படித்தான் !- வீடியோ

    சென்னை: என்ன நிலையில் கட்சி இருக்கிறது, என்ன நிலையில் கட்சி தலைவர் இருக்கிறார் என்பதை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கொஞ்சமாவது நினைத்து பார்க்க வேண்டும்.

    விஜயகாந்த் என்ற வேரிலிருந்து முளைத்ததுதான் தேமுதிக. அவர் இல்லையென்றால் கட்சியே காலியாகிவிடும் சூழல் உள்ளது. கட்சி ஆரம்பித்து இத்தனை காலம் வரை யாராவது மக்கள் மத்தியில் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்களா?

    அன்று அருண்பாண்டியன், மாபா பாண்டியராஜன் இவர்கள் எல்லாம் இருந்தார்கள், கட்சியும் பலமாக இருந்தார்கள். அதேபோல, வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் திமுக பக்கம் போன பிறகு வேறு யாருமே பலமானவர்கள் உருவாகவே இல்லை, கட்சியும் அதுபோன்ற வலிமை மிக்கவர்களை உருவாக்கவும் இல்லை.

    விஜயபிரபாகரன்

    விஜயபிரபாகரன்

    இப்போதுவரை அந்த கட்சியில் தெரிந்த நபர்கள், பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன். இவர்களை பற்றி மக்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? மக்களை பற்றியே கூட இவர்களுக்கு என்ன தெரியும்? விஜயகாந்த் மீது கட்சியை தாண்டி, அரசியலை தாண்டி எக்கச்சக்க பாசம் வைத்திருப்பவர்கள் தமிழக மக்கள். அவர் பூரண நலமாகி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருத்தரைபோலவே நினைப்பவர்கள். இது எந்த அரசியல் தலைவருக்கும் இதுவரை கிடையாத உச்சக்கட்ட பாசம்.

    உடல்நிலை

    உடல்நிலை

    ஆனால் கடந்த முறை தேர்தலில் ஊர் ஊராக சென்று விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். ஆனால் ஏதோ சினிமாவுக்கு ஜாலியாக போய்ட்டு வரலாம் என்பதுபோலதான் இந்த கூட்டங்களுக்கு மக்கள் கூடினார்கள். விஜயகாந்தின் பலவீனம் காமெடியாக தென்பட ஆரம்பித்தன. ரவுண்டு கட்டி பிரச்சாரங்கள் செய்தும், ஒரு இடத்தில்கூட ஜெயிக்க முடியவில்லை.

    சுற்றுப்பயணம்

    சுற்றுப்பயணம்

    அப்படி இருக்கும்போது, இப்போது ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்கு அன்றைக்கு போனவர் இன்னும் வெளியே வரவில்லை. மக்களிடமும் பேசவில்லை. உடம்பு முழுசா நல்லாயிடுச்சா, இல்லையான்னும் தெரியல. இதுல எப்படி பிரச்சாரத்துக்கு வெளியே வந்து ஊர் ஊராக போக முடியும் என்றும் தெரியவில்லை. ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கையும், ஒரு காலத்தில் இருந்த எதிர்கட்சி தலைவர் என்ற போஸ்டிங்கையும் இப்போது சொல்லி சீட் பேரம் பேசிக் கொண்டிருப்பது சரியானதாக தெரியவில்லை.

    இவ்வளவு பேராசையா?

    இவ்வளவு பேராசையா?

    கட்சியின் செல்வாக்கையும் இதுநாள் வரை உயர்த்தாமல், உறுப்பினர் சேர்க்கையையும் சொல்லிக் கொள்ளும்படி வைத்து கொள்ளாமல், மக்களிடமும் விஜயகாந்த்தை நெருங்கவிடாமல், அல்லது நெருங்க முடியாமல் இருக்கும் சூழலில் 7 சீட் தேமுதிகவுக்கு கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? பாமகவுடன் போட்டி போட வேண்டிய தேவையே இல்லை. பாமக இவ்வளவு நாள் களப்பணியில் இறங்கியது, அன்புமணி மக்களுடன் நேரடி தொடர்பை நாளுக்கு நாள் பெருக்கி வந்தார்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    பாமக செல்வாக்கை குறையாமலும் பார்த்து கொண்டார். டாக்டர் ராமதாஸ் நித்தம் ஒரு அறிக்கை, நித்தம் ஒரு ட்வீட் என அரசியலில் தொடர்பு கொண்டு மக்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆனால் இது எதுவுமே இல்லாமல் இப்போது பாமகவுடன் போட்டி போடுவது சரிதானா?

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    7 சீட்டோ, 5 சீட்டோ யார் கொடுத்தாலும் லாபம் கொடுப்பவருக்கு இல்லை. வாங்கி கொள்ளும் தேமுதிகவுக்குதான் இருக்கிறது. அதனால் கொடுப்பதை வாங்கி கொள்ளும் நிலையில்தான் தேமுதிக இருக்கிறது என்பதையும், அதுகூட விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காகத்தான் தரப்படுகிறது என்பதையும் பிரேமலதா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    English summary
    Premalatha's greedings to force the BJP to give 7 MP Seats without strengthening the DMDK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X