சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழற்றிவிடும் அதிமுக... அமமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ள ஒரே கட்சி தேமுதிக?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்து போயிருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கூட்டணி என்ற வார்த்தையே பிடிக்காது என பேசியிருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் அத்தனை கட்சிகளும் கூட்டணி தொடர்பாக கமுக்கமான பேச்சுவார்த்தை நடத்துகின்றன. ஆனால் திமுகவோ, அதிமுகவோ அழைக்காத நிலையில் எங்களுக்கு 41 தொகுதிகள்தான் வேண்டும் என வாய்துடுக்காக பேசினர் தேமுதிக தலைவர்கள்.

தேமுதிகவுக்கு சிக்னல் கட்

தேமுதிகவுக்கு சிக்னல் கட்

எடுத்த எடுப்பிலேயே இந்த போடுபோட்ட காரணத்தால் இரு கட்சிகளுமே தேமுதிகவை கண்டுகொள்ளாமல் ஓரம்கட்டிவிட்டன. பிரேமலதாவும் கூட, அதிமுக தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வாங்க என கெஞ்சி பார்த்தார். அதிமுகவில் இருந்து இம்மியளவு சிக்னல் கூட வரவில்லை.

சசிகலா ஆதரவு

சசிகலா ஆதரவு

இதனால் வேறுவழியே இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனித்தேபோட்டியிடலாம் என்கிற முடிவுக்கு தள்ளப்பட்டுவிட்டது தேமுதிக. இன்னொரு பக்கம் இடைவிடாமல் சசிகலாவையும் பிரேமலதா ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

திமுக கூட்டணியை பொறுத்தவரை என்னதான் தொகுதிகள் குறைத்து கொடுக்கப்பட்டாலும் எந்த கட்சியும் கூட்டணியைவிட்டு வெளியே வரும் நிலையில் இல்லை. காங்கிரஸ், விசிக வெளியே போகும்.. திமுக அணியில் மநீம இணையும் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிக குறைவாகவே தெரிகிறது.

அமமுக அணியில் தேமுதிக

அமமுக அணியில் தேமுதிக

தற்போதைய நிலையில் அமமுக- தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது; திமுக கூட்டணியில் இடம்பெற முடியாத சிறு கட்சிகளின் சாய்ஸ் ஆகவும் அமமுக இருக்கிறது என்பதுதான் யதார்த்தமானது.

English summary
Sources said that DMDK's only choice to join AMMK Alliance for the Tamilnadu Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X