அதிமுகவுடன் பேச்சு வார்த்தை முடியாமல்.. வேட்பாளர் நேர்காணலை துவங்கிய தேமுதிக
சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தங்களது கட்சி வேட்பாளர்களிடம் தேமுதிக தலைமை நேர்காணல் நடத்தியுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரான விஜயகாந்த், இன்று சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

உடன் தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதேஷ், ப.பார்த்தசாரதி, எஸ்.அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், தொகுதி எண்ணிக்கை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், வேட்பாளர்களிடம் நேர்காணலை தொடங்கியுள்ளது, தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது.