சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்க தேமுதிக கூட்டணி ராசிதான் காரணம்.. பிரேமலதா பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால்தான் ஆட்சியே அமைக்க முடியும் என்பதுதான் வரலாறு என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது புரியாத புதிராக உள்ளது. 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு.

DMDK Treasurer Premalatha speaks on Alliance for Assembly Election

தற்போதைய நிலையில் திமுக, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 இடம் என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லாத ஒன்று. கமல்ஹாசன் அல்லது தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணிக்குப் போனால் மட்டுமே சாத்தியம். இல்லை எனில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும்.

ஹரியானா முதல்வரின் விவசாய சட்ட ஆதரவு நிகழ்ச்சி- போராடிய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை வீச்சுஹரியானா முதல்வரின் விவசாய சட்ட ஆதரவு நிகழ்ச்சி- போராடிய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை வீச்சு

ஆனாலும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரது பேச்சுகள் பூடகமாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில்தான் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால்தான் ஆட்சியே அமைக்க முடியும் என பிரேமலதா பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய பிரேமலதா, 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அதிமுக ஆட்சி அமைந்தது. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். மத்தியில் பாஜக ஆட்சி 2-வது முறையாக தொடர்ந்தது என பேசி உள்ளார்.

English summary
DMDK Treasuer Premalatha confidents that If any Party will alliance with her party, it will be capture the power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X