சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது விஜயகாந்த்தை பார்க்க அனுமதிக்காத ஸ்டாலின்.. பிரேமலதா

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

    சென்னை: கருணாநிதி உடல்நலம் இன்றி இருந்தபோது அவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் அனுமதிக்கவில்லை என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிரேமலதா விஜயகாந்த். அவர் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் இருந்து, திமுக என்பது தில்லுமுல்லு கட்சி என்பதை நான் உரத்த குரலில் சொல்லி வருகிறேன்.

    Dmdk treasurer Premalatha Vijayakanth Slam DMK treasurer Durai Murugan

    உங்கள் அரசியல் சூழ்ச்சியை ஒருவரை வீட்டுக்கு வர வைத்து தான் நிறைவேற்ற வேண்டுமா. இது இதைவிட பெரிய அநாகரீகம் தேவையா.

    மூன்று நாட்களுக்குள் திமுக வேட்பாளர் பட்டியல்... மு.க. ஸ்டாலின் அறிவிப்புமூன்று நாட்களுக்குள் திமுக வேட்பாளர் பட்டியல்... மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    விஜயகாந்தை, ஸ்டாலின் சந்திக்க வந்தபோது நாங்கள் நினைத்தால் அதை தடுத்திருக்க முடியாதா? கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று முதலில் அனுமதி கேட்டது விஜயகாந்துதான். ஆனால், கடைசிவரை ஸ்டாலின் அதற்கு அனுமதி தரவில்லை.

    ஆனால் நாங்கள் மிகப் பெரிய மனதுடன் ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை தடுக்கவில்லை. அரசியல் என்று வரும்போது ஒவ்வொரு முறையும் எங்களை, பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திமுக நடந்துகொண்டுள்ளது.

    ஸ்டாலின் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரை கௌரவமாக நடத்தி திருப்பி அனுப்பினோம். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துரைமுருகன். நானும் அதே மாவட்டத்தில்தான் டிகிரி முடித்தேன். வேலூர் பெயரை கெடுக்கும் வகையில், அவர் இவ்வாறு கீழ்த்தரமான அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    English summary
    Dmdk treasurer Premalatha Vijayakanth Slam DMK treasurer Durai Murugan over Lok Sabha Alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X