சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி மகிழ்ச்சியை சீர்குலைத்த தேமுதிக .. வந்த வேகத்திலேயே வெந்து போன கூட்டணி!

4 சீட்டுகள் கிடைத்த வெறுப்பில் தேமுதிக தொண்டர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி மகிழ்ச்சியை சீர்குலைத்த தேமுதிக

    சென்னை: மோடி வருகையை மகிழ்ச்சிரகமாக மாற்ற பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் தேமுதிக தனது அரசியல் பேரத்தால் அதை காலி செய்து விட்டது. பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளது பாஜக. அதேசமயம், அதிமுகவினர் உற்சாகமாக காணப்படுகின்றனர்.

    இன்று சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பலத்தை காட்ட வேண்டும் என்று திட்டத்தில் இருந்தனர். இதில் எப்படியாவது விஜயகாந்த்தை அந்த மேடையில் ஏற்றிவிடுவது என முயற்சி படு வேகமாக எடுக்கப்பட்டது.

    ஆனால் தேமுதிக அதை சீர்குலைத்து விட்டது. அதிமுக எத்தனையோ இறங்கி வந்தும் கூட விடாப்பிடியாக இருந்து வந்த அந்தக் கட்சி இன்று காலை போட்ட டிராமா நாட்டு மக்களை அதிர வைத்து விட்டது.

    கெத்தாக ஆரம்பித்து.. முறுக்கு காட்டி நெருக்கடி கொடுத்து.. கடைசியில் பணிந்து போன தேமுதிக!கெத்தாக ஆரம்பித்து.. முறுக்கு காட்டி நெருக்கடி கொடுத்து.. கடைசியில் பணிந்து போன தேமுதிக!

     படங்கள் அகற்றம்

    படங்கள் அகற்றம்

    எனினும் இப்படி விஜயகாந்த் அதிமுக தலைமையை கெஞ்ச வைத்துவிட்டாரே என்று அதிமுக தொண்டர்கள் கடுப்பானார்கள். இதனால் விழா நடக்கும் வழியெங்கும் வைக்கப்பட்டிருந்த தேமுதிக கொடிகளை பிடுங்கி போட ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படங்களும் அகற்றப்பட்டன. இதை பார்த்து தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சியானதால் பரபரப்பு கூடிவிட்டது.

     4 சீட்டுகள்

    4 சீட்டுகள்

    இந்நிலையில்தான் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் என அதிகாரப்பூர்வமாக முடிவானது. இதையடுத்து, கூட்ட மேடையில் உடனடியாக விஜயகாந்த், ஜி.கே.வாசன் படங்கள் வைக்கப்பட்டன. இதை பார்த்ததும்தான் தொண்டர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து "கூல்" ஆனார்கள்.

     விஜயகாந்த் படம்

    விஜயகாந்த் படம்

    இதில் வாசன் படமும் மேடையில் இடம் பெற்றதால் கூட்டணியும் உறுதியாகிவிடும் என கூறப்பட்டது. அதேசமயம், இப்படி இழுபறி செய்து விட்டு தேமுதகி வருவதால் கூட்டணி பலமாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

     வெறுப்பு

    வெறுப்பு

    அதிமுக தலைமையை கெஞ்ச வைத்துவிட்டாரே விஜயகாந்த் என்று அந்த கட்சி தொண்டர்களும், கடைசியில் இப்படி காத்திருந்தும் வெறும் 4 தந்துவிட்டார்களே என்று தேமுதிக தொண்டர்களும் வெறுப்பில் இருந்தனர். இந்த நிலையில்தான் அதிரடியாக திமுக மூலம் தேமுதிகவின் ரகசிய முகம் அம்பலமாகி இன்று கூட்டணியே கிட்டத்தட்ட முறிந்து போய் விட்டது. மொத்தத்தில் கூட்டணி உருவான வேகத்தில் அறுந்து போய் விட்டதாகவே கருதப்படுகிறது.

    English summary
    It is doubtful whether the AIADMK and DMDK will have a smooth relationship between them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X