சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாமகவுக்கு முதலில் சீட் கொடுத்ததால்தான் வம்பு.. தனித்து போட்டியிடவும் ரெடி.. பிரேமலதா பரபர பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

    சென்னை: பாமகவை முதலில் அழைத்து கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட வைத்ததுதான், எங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தெரிவித்தார்.

    சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர் கூறியதாவது: தனித்து போட்டியிட எங்களுக்கு பயமில்லை. தனித்து போட்டியிடும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்தியது தேமுதிகதான். எதையும் சந்திக்க தேமுதிக தயாராக உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து தொகுதி பங்கீடு உடன்படிக்கை செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

    நீ.. வா.. போ.. நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா.. பிரஸ் மீட்டில் கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள் நீ.. வா.. போ.. நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா.. பிரஸ் மீட்டில் கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள்

    பாமகவிற்கு முதலில் சீட்

    பாமகவிற்கு முதலில் சீட்

    பாமகவை முதலில் அழைத்து சீட்டுகளை ஒதுக்கீடு செய்த பிறகு பாஜகவை அழைப்பது, பிறகு, தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால்தான் இன்னும் முடிவு எட்டப்படாமல் கால தாமதமாகி வருகிறது. இதனால் மனவருத்தம் இருந்ததால் அந்த நேரத்தில் திமுக எங்களை தொடர்பு கொண்டது. இதை சுதீஷ் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்.

    மோசமா விமர்சித்தாலும் கூட்டணி

    மோசமா விமர்சித்தாலும் கூட்டணி

    விஜயகாந்த்தை ஜெயலலிதா எவ்வளவு மோசமாக விமர்சனம் செய்தார். அதற்காகவெல்லாம் நாங்கள் கூட்டணி அமைக்காமல் இல்லை. அதிமுக உடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக கூட பதவியில் அமர்ந்தார்.

    எங்கள் தயவில்தான் ஆட்சியே இருக்கு

    எங்கள் தயவில்தான் ஆட்சியே இருக்கு

    எங்கள் தயவில் அன்று ஆட்சியைப் பிடித்த அதிமுக, இன்றளவும் ஆட்சியில் இருப்பது எங்கள் தயவில்தான். ஒரு கட்சியின் மீது விமர்சனம் செய்தால், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பது அர்த்தம் கிடையாது.

    அதிமுக எம்பிக்கள் சரியில்லை

    அதிமுக எம்பிக்கள் சரியில்லை

    37 எம்.பி களை வைத்திருந்த அதிமுக தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களையும் கொண்டுவரவில்லை. 37 எம்பிகளால் தமிழகத்துக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை. அந்த விமர்சனத்தில் நான் இப்போதும் உறுதியாகத்தான் உள்ளேன். ஆனால் விஜயகாந்த் எங்கே உள்ளாரோ அங்கே நல்ல பணிகளை நடைபெற வைப்பார். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

    English summary
    Dmdk will not hesitate to contest solo in the coming Lok Sabha election, says party treasurer Premalatha Vijayakanth in a press meet on today. Giving seats to PMK before taking opinion from the dmdk is the main reason for this, she added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X