சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கண்டுக்கலை.. செலவழிக்க பத்து காசு இல்லை.. கடனாளியாக மாறி வரும் தேமுதிக வேட்பாளர்கள்

தேர்தல் செலவுக்கு தொகுதிகளில் பணமின்றி தேமுதிக வேட்பாளர்கள் தவிப்பதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிக பாமகவிடம் நிறைய பாடம் கற்க வேண்டும்- வீடியோ

    சென்னை: தேமுதிக வேட்பாளர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறதாம்.. கையில் பத்து பைசா இல்லாமல் தொகுதிகளில் தலைகாட்ட முடியவில்லையாம்.. இதனால் வேட்பாளர்கள் அதிகமான சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்களாம்!

    இதுவரைக்கும் தேமுதிக செய்த அமர்க்களம்போல் தமிழக அரசியலில் வேறு யாருமே இந்த அளவுக்கு கூட்டணி, சீட் விஷயத்தில் கிராக்கி செய்தது கிடையாது. விஜயகாந்த்தை நாம் விட்டுவிடுவோம். அவரை பற்றி பேசவும் நமக்கு மனசு வரவில்லை.

    ஆனால் சுதீஷூம், பிரேமலதாவும்தான் விடாப்பிடியாக இருந்து திமுக, அதிமுகவை சுற்ற விட்டு, பாமகவுடன் போட்டி போட்டு கடைசியில் 4 சீட்களை ஒரு மாசம் கழித்து வாங்கிவிட்டார்கள். ஆனால் வேட்பாளர்கள் தேர்வில் சொதப்பலோ சொதப்பல்!

    20 மாநிலங்களில்.. 91 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல்: இன்றுடன் முடிகிறது வேட்பு மனு தாக்கல்20 மாநிலங்களில்.. 91 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல்: இன்றுடன் முடிகிறது வேட்பு மனு தாக்கல்

    நடுத்தர வர்க்கம்

    நடுத்தர வர்க்கம்

    கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் செயல்பாடுகளால் அதிமுக, பாஜக செம எரிச்சலில் உள்ளது போலும். தேமுதிக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு பணமே தரவில்லையாம். இருப்பதே 4 வேட்பாளர்கள். அதில் சுதீஷை தவிர மற்ற 3 பேருமே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.

    பணம் இல்லை

    பணம் இல்லை

    சுதீஷுக்கு அடுத்து பிரபலமாக உள்ளவர் திருச்சியில் களமிறங்கும் டாக்டர் இளங்கோவன்தான். இவர் உட்பட 3 பேருமே கையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறாராம். அதனால் கட்சி தலைமையிடம் கேட்டு பார்த்திருக்கிறார்கள் போலும். அங்கேயும் பணம் தரவில்லை. சரி.. தொகுதிக்குள் கூட்டணி கட்சி தலைமையாவது தரும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

    கடன் வாங்கி பிரச்சாரம்

    கடன் வாங்கி பிரச்சாரம்

    அங்கிருந்தும் பண உதவி செய்யவில்லை. இதனால் 3 வேட்பாளர்களும் நொந்து போய் கிடக்கிறார்களாம். இதைவிட கொடுமை.. தொகுதிக்குள் இவர்கள் நுழையும்போதே இவர்களை வரவேற்ககூட கூட்டணி சார்பில் யாரும் இல்லையாம். இதில் இளங்கோவன் மட்டும் கைகாசை போட்டும், கடன் வாங்கியும் செலவு செய்து.. கடைசியில் இவரும் கடனாளி ஆகிவிட்டாராம். திருச்சி அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர்.. என ஒருத்தரும் பத்து பைசாவை கண்ணில் காட்டவில்லையாம்.

    வேட்பாளர்கள் நிலை

    வேட்பாளர்கள் நிலை

    ஓவராக சேட்டை பண்ணியதால் தேமுதிகவை கூட்டணி கட்சிகள் இப்படி பழி வாங்குகிறதா என தெரியவில்லை. ஆனால் அக்கட்சியின் வேட்பாளர் நிலைமையோ பரிதாபமாக உள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வளவு கெத்தாக பேசினால் மட்டும் போதாது.. சொந்த கட்சிக்காக தலையை கொடுத்துவிட்டு மாட்டி கொண்டிருக்கும் வேட்பாளரின் நிலைமையையும் யோசித்து பார்க்க வேண்டும்... சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

    English summary
    The DMDK candidates are said to have difficulties with the cost of electoral expenses. It is said that coalition parties did not help them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X