சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் பேச முடியாது.. தேமுதிகவில் பிரச்சார பீரங்கி இல்லை.. விஜயபிரபாகரன் பேசினால் அவ்வளவுதான்!

தேமுதிகவுக்கு விஜயகாந்த்தால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் பேசமாட்டார்- சுதீஷ் அறிவிப்பு- வீடியோ

    சென்னை: தேமுதிகவுக்கு அதிமுக தொகுதிகளை ஒதுக்கி தந்துவிட்டது. இருந்தாலும் அக்கட்சியின் மிகப்பெரிய மைனஸ் என்ன தெரியுமா?

    இந்த 4 சீட்களை வாங்க ஒரு மாதத்திற்கும் மேலாக பாடாய் பட்டு விட்டது தேமுதிக. ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளும் ஒன்னும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.

    விடாமல், தொடர்ந்து மல்லுக்கட்டவும்தான் கள்ளக்குறிச்சியே கிடைத்திருக்கிறது. இல்லையென்றால் அதுவும் கிடையாது.

    டாக்டர் vs டாக்டர்.. தர்மபுரியில் களமிறங்கும் அன்புமணி.. திமுகவின் அதிரடி திட்டம் என்ன தெரியுமா? டாக்டர் vs டாக்டர்.. தர்மபுரியில் களமிறங்கும் அன்புமணி.. திமுகவின் அதிரடி திட்டம் என்ன தெரியுமா?

    பிரச்சாரம் இல்லை

    பிரச்சாரம் இல்லை

    இந்த எம்பி தேர்தலை பொறுத்தவரை விஜயகாந்த் போட்டியிடவில்லை என்பது முதல் மைனஸ். போட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை, பிரச்சாரம் செய்ய மாட்டார் என்பது இரண்டாவது மைனஸ். அப்படியானால் இந்த கட்சி சார்பில் பிரச்சாரம் செய்ய போவது யார்?

    பிரச்சார மேடை

    பிரச்சார மேடை

    சுதீஷ் மட்டும் போட்டியிடுவார் என்றால் கட்சிக்காக பிரேமலதா பிரச்சாரம் செய்யலாம். ஆனால் பிரேமலதாவும் சேர்ந்து போட்டியிட்டால் யார்தான் பிரச்சாரம் செய்வது? வெறுமனே விஜயகாந்த்தை கொண்டு போய் பிரச்சார மேடையில் நிற்க வைத்தால், நல்லா இருக்குமா?

    பேச்சுதிறன்

    பேச்சுதிறன்

    ஒரு கட்சி தலைவர் என்பவர் உயிரை தந்து முழக்கமிட்டு, பேசுபவராக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அடிப்படை சொத்தே பேச்சுத்திறன்தானே? அன்று முழக்கமிட்டு பேசிய விஜயகாந்த்தை இன்று பொம்மை போல கொண்டு வந்து மேடைகளில் நிறுத்தினால் அதை தமிழக மக்களால் தாங்கி கொள்ள முடியுமா?

    சிக்கல்

    சிக்கல்

    அதுவும் இன்றைய சூழலில் நாட்டு நடப்பு, அரசியல் சூழ்ச்சிகள், உள்ளிட்ட சமூக அவலங்களை அனல்தெறிக்க பேச வேண்டிய நிர்ப்பந்தம் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தேமுதிகவை பொறுத்தவரை யார்தான் பிரச்சாரம் செய்ய போவது என்பதுதான் பெரிய சிக்கல். அதற்காக விஜயகாந்த்தை கொண்டு நிறுத்தி எம்ஜிஆர் பாணியில் அனுதாப ஓட்டுக்களை பெறுவது என்ற கோணத்தில் தேமுதிக யோசித்தால் அது அவ்வளவும் எதிர்ப்பு ஓட்டுக்களாகத்தான் மாறும்!

    விஜயபிரபாகரன்

    விஜயபிரபாகரன்

    இதையெல்லாம் பார்த்து, விஜயபிரபாகரனை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினால் அவ்வளவுதான்.. இருப்பதும் பிச்சிக்கிட்டு பறந்து போகும்! அதனால் கள்ளக்குறிச்சியை தவிர மீதமுள்ள 3 தொகுதிகளிலுமே தேமுதிக வெற்றி பெறுவது சிக்கல்தான்! இதை யார் எப்படி சரி செய்ய போகிறார்களோ.. பொறுத்திருந்து பார்ப்போம்!

    English summary
    Vijyakanths health Condition is major drawback for DMDK Partys campaign in MP election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X