சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நச்சென 2 கண்டிஷன்கள்.. தேமுதிகவின் தடாலடி.. "ஓகே" சொல்லுமா அதிமுக அல்லது "ஸாரி"யா!?

அதிமுகவுக்கு 2 கோரிக்கைகளை தேமுதிக வைத்துள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில், மொத்தம் 2 கண்டிஷன்களை தேமுதிக அதிமுக தலைமையிடம் விதித்துள்ளதாம்.. அந்த கண்டிஷனை கேட்டு அதிமுக மிரண்டு போய் உள்ளதாம்!

ஒவ்வொரு முறை தேர்தல் என்றாலும், தேமுதிகவின் டிமாண்டு அதிகமாகவே இருக்கும்.. பாமகவுக்கு இணையாக தங்களை ஒப்பிட்டு கொண்டு, அவர்களுக்கு தரும் சீட் போலவே தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு நெருக்கடி தருவது இயல்பு.

இதற்கு காரணம் பாஜகவானது, தேமுதிக மீது பற்று கொண்டுள்ளதுதான்.. குறிப்பாக விஜயகாந்த் என்றால் பாஜக தலைமைக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் மீதுள்ள பாசத்தினாலும், நன்மதிப்பினாலும்தான் இப்போதுவரை கூட்டணியில் தொடர முடிகிறது என்பதை மறுக்க முடியாது.

தேர்தல்

தேர்தல்

இந்த முறை தேர்தலை பொறுத்தவரை தேமுதிக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமலேயே உள்ளது.. விஜயகாந்த் பிறந்த நாள் அன்று, சிங்கம் சிங்கிளாகத்தான் வரும், தனித்து போட்டி என்றார்.. கூட்டணி அச்சாரத்திற்காக பிரேமலதா அப்படி சொன்னாரா என்று தெரியவில்லை.. அதிமுக அதை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

கார்ட்டூன்

கார்ட்டூன்

இதற்கு பிறகு சுதீஷ் ஒரு சர்ச்சையான கார்டூனை தன்னுடைய ஃபேஸ்புக்கல் பதிவிட்டிருந்தார்..
அந்த கார்ட்டூனில், நடுவில் விஜயகாந்த் நிற்க, அவரது காலடியில் மஞ்சள் துண்டு தோளில் போட்ட பெரியவர், கறுப்பு சட்டை போட்டவர், வெள்ளை வேட்டி சட்டையில் பிற அரசியல்வாதிகள், உள்ளிட்ட நிறைய பேர் விஜயகாந்தை சுற்றி, கீழே விழுந்து கும்பிடுவது போல வரையப்பட்டுள்ளது.. இந்த கார்ட்டூனை பார்த்து திமுக மட்டுமல்ல, அதிமுகவும் கொந்தளித்துவிட்டது. இதன்பிறகு அந்த கார்டூனை சுதீஷ் உடனடியாக நீக்கிவிட்டாலும், எதற்காக அதை பதிவிட்டார்? என்ற கேள்வி இன்னமும் அடங்கவில்லை.

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இப்படிப்பட்ட சூழலில்தான், மறுபடியும் தேமுதிக அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.. வெறும் 2 கண்டிஷன்தான் தேமுதிக தரப்பில் வைக்கப்பட்டுள்ளதாம்.. ஒன்று, சுதீஷூக்கு ராஜ்ய சபா சீட் தர வேண்டும், மற்றொன்று, விஜயகாந்த் உடல்நலம் கருதி சென்னைக்குள்ளேயே ஒரு தொகுதி, குறிப்பாக விருகம்பாக்கம் தொகுதி தர வேண்டும்... இதுதான் அந்த கோரிக்கைகள்.

 ராஜ்ய சபா சீட்

ராஜ்ய சபா சீட்

சுதீஷூக்கு இதற்கு முன்பே ராஜ்ய சபா சீட் கேட்கப்பட்டு, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.. இதற்காக சுதீஷ் தரப்பு டெல்லியில் முகாமிட்ட சம்பவமும் நடந்துள்ளது.. ராஜ்ய சபா சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது என்று பிரேமலதா சொல்ல, அப்படி ஒப்பந்தமே தேமுதிகவுடன் போடவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும் அப்போது மறுத்திருந்தார். இந்நிலையில், மறுபடியும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

அதேபோல, இதற்கு முன்பு, விருதாச்சலம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை என பிற இடங்களில் தேமுதிக போட்டியிட்ட நிலையில், இப்போது சென்னைக்கு உள்ளேயே, அதுவும் விருகம்பாக்கம் தொகுதியே வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு காரணம் விஜயகாந்த்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இருக்கலாம் என்கிறார்கள். இந்த 2 கோரிக்கைகளுக்கும் அதிமுக ஓகே சொல்லுமா? அல்லது இரண்டில் ஒன்றா? அந்த ஒன்று என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது.

English summary
DMDKs two conditions to Edapadi Palanisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X