• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போட்டியிட்ட மொத்த இடத்திலும் வெளுத்தெடுத்த திமுக.. அதிர்ந்து தரைமட்டமான அதிமுக!

|
  தமிழக லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் படு விசித்திரமாக இருக்கிறது- வீடியோ

  சென்னை: பரவாயில்லை கலைஞரின் பிள்ளை மு.க.ஸ்டாலின் என்று இனிமேல் அடையாளம் காட்டத் தேவையில்லை. அந்த அளவுக்கு தனது சாதுரியத்தையும், சாணக்கியத்தையும் இந்த லோக்சபா தேர்தலில் மு.க.ஸ்டாலின் நிரூபித்து விட்டார். தனது திறமையை நிரூபித்து அசத்தி விட்டார். திமுக போட்டியிட்ட இடங்களில் வெற்றி பெற்று 100 மார்க் வாங்கி விட்டது.

  திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது பார்த்த ஸ்டாலின் வேறு. கலைஞர் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் வேறு மாதிரியாக மாறினார். அவரது நடவடிக்கைகள், வியூகங்கள் பல நேரங்களில் சலசலப்பை ஏற்படுத்தின. அவர் நிதானமாக இருக்கிறார் என்ற விமர்சனமும் இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்கியபோது டக்கென விஸ்வரூபம் எடுத்தார் ஸ்டாலின்.

  தேர்தல் வியூகங்களை யாரும் எதிர்பாராத மாதிரி எடுத்தார். கருணாநிதி காங்கிரஸை ஒதுக்கி வைத்தார் என்றால், ஸ்டாலின் முதல் ஆளாக காங்கிரஸைக் கூப்பிட்டு இந்தா பிடி 10 தொகுதிகள் என்று கூறி அசரடித்தார். பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க வேண்டும் என்ற குரல் பெரிதாக இருந்த நிலையில் பாமகவுக்கு கதவு மூடப்பட்டது. இதேபோலத்தான் தேமுதிக விவகாரமும்.

  பொள்ளாச்சி சம்பவம்.. திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

   வித்தியாசமான வியூகம்

  வித்தியாசமான வியூகம்

  ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வியூகங்களை வித்தியாசமாக வகுக்க ஆரம்பித்தார் ஸ்டாலின். இதுவரை இல்லாத புதுமையாக எல்லோருக்கும் சீட்டுகளை அள்ளிக் கொடுத்தார். இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 என்று தாராளம் காட்டினார்.

   திமுகவுக்கு குறைவு

  திமுகவுக்கு குறைவு

  அதேசமயம், தனக்கென குறைந்த சீட்டுகளையே ஒதுக்கினார். இது விமர்சனத்துக்குள்ளானாலும் ஸ்டாலின் கவலைப்படவில்லை. காரணம் கூட்டணிக் கட்சிகள் சிலவற்றுக்கு அவர் வைத்த செக்.

   மொத்தம் 24

  மொத்தம் 24

  திமுக இந்தத் தேர்தலில் 21 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களைக் களம் இறக்கியது. இது தவிர இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி ஆகியோரை உதயசூரியன் சின்னத்தில் அது களம் இறக்கியது. வேலூர் தொகுதி தேர்தல் ரத்தானதால் திமுக வேட்பாளர்கள் எண்ணிக்கை 23 ஆக குறைந்தது.

   நூற்றுக்கு நூறு

  நூற்றுக்கு நூறு

  தற்போது இந்த 23 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதன் வெற்றி விகிதமானது 100 சதவீதமாக உள்ளது. அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் திமுக இதை சாதித்துள்ளது. அதேபோல இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் 100 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளன. காங்கிரஸ் மட்டும் ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

   3வது இடம்

  3வது இடம்

  இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் 3வது பெரிய கட்சி என்ற பெயரை திமுக பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய இடத்தை திமுக பெற்றதில்லை. காரணம் அப்போதெல்லாம் தெலுங்கு தேசம், திரினமூல் காங்கிரஸ் ஆகியவை அதிக இடங்களில் வெற்றி பெற்று வரும். அதை உடைத்து தகர்த்து முதல் சாதனையைச் செய்தவர் ஜெயலலிதா. தற்போது அந்த இடத்திற்கு ஸ்டாலின் வந்துள்ளார்.

   சபாஷ் ஸ்டாலின்

  சபாஷ் ஸ்டாலின்

  ஸ்டாலின் முன்பு பெரும் சவால்கள் இருந்தன. அதில் முக்கியமானது, கருணாநிதி இல்லாத திமுகவை ஸ்டாலின் எப்படி கரை சேர்ப்பார் என்பது. அதில் டிஸ்டிங்ஷன் வாங்கி பாஸ் ஆகியுள்ளார் ஸ்டாலின் என்றுதான் சொல்ல வேண்டும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  In this Election DMK has won 100 per cent of the contestants everywhere. It has been named as the 3rd largest party in the national level.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more