• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பாட்டைப் போட்டு பட்டையைக் கிளப்பும் "பார்ட்டி"கள்.. அதிலும் அந்த டியூன் இருக்கே.. அடேங்கப்பா!

|

சென்னை: அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி, ஆந்திராவாக இருந்தாலும் சரி.. சினிமா இல்லாமல் வாழ்க்கையில் ஒரு விஷயம் கூட உருப்படியாக நடக்காது போல.

இப்பக் கூட பாருங்க, தமிழக தேர்தல் களத்தில் பாட்டும், பட்டையைக் கிளப்பும் ட்யூனுமாக அரசியல் கட்சியினர் அதகளம் செய்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரப் பாடல்களை பக்காவாக ரெடி செய்து வைத்து விட்டன. இதில் திமுக, அதிமுகதான் ஒவ்வொரு தேர்தலிலும் டாப்பில் இருக்கும். இவர்களது பாட்டுக்கள்தான் வைரலாகும்.. அதிகமாக பேசப்படும்..

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக

திமுக - அதிமுகவின் பாடல்கள்

திமுக - அதிமுகவின் பாடல்கள்

இந்த முறையும் சட்டசபைத் தேர்தலையொட்டி திமுகவும் சரி, அதிமுகவும் சரி ஆளுக்கொரு வீடியோவுடன் வீதி வீதியாக கலக்கிக் கொண்டுள்ளனர். இந்தப் பாடல்களைப் பொறுத்தவரை முதலில் ஹிட் ஆனது என்னவோ அதிமுக வெளியிட்ட வெற்றி நடை போடும் தமிழகமே பாடல்தான். ஆரம்பத்தில் இந்த பாடல் வீடியோதான் வைரலானது. எங்கு பார்த்தாலும் இந்த பாட்டுதான்..

சன்னில் வந்த பிறகு பிரபலம்

சன்னில் வந்த பிறகு பிரபலம்

இந்தப் பாட்டு ரொம்ப பிரபலமானதே சன் டிவியில் போடப்பட்ட பிறகுதான். அதுவரைக்கும் ஹிட் ஆகாமல் வலம் வந்த இந்தப் பாட்டு சன் டிவியிலேயே போட்டுட்டாங்கப்பா என்ற டாக் வந்த பிறகு படு வேகமாக வைரலாகி விட்டது. அதிமுக அரசின் நலத் திட்டங்களையும், எடப்பாடியார் புகழ் பாடும் காட்சிகளும் அடங்கிய இந்த வீடியோ பாடல் பட்டி தொட்டியெங்கும் நல்லாவே ரீச் ஆகியுள்ளது.

குட்டிப் பசங்களிடமும் பிரபலம்

குட்டிப் பசங்களிடமும் பிரபலம்

குட்டிப் பசங்க கூட இதை முனுமுனுக்கும் அளவுக்கு இந்த பாடலை கொண்டு போய்ச் சேர்த்து விட்டது அதிமுக. ஆனால் இந்த பாடல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட பிறகு தற்போது அடக்கி வாசித்து வருகின்றனர். மறுபக்கம் திமுக உருவாக்கிய ஸ்டாலின் தான் வாராரு பாடல் இப்போது வைரலாகியுள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பாடல்தான். செல்போன் ரிங் டோன், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டேஸ், யூடியூப், இணையதளங்கள், டிவி சானல்கள் என எங்கு பார்த்தாலும் ஸ்டாலின் முகம்தான்.

பக்கா பாடல்கள்

பக்கா பாடல்கள்

முழுக்க முழுக்க தொழில்முறைக் கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட வீடியோ இது. பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருக்கு. சினிமாத்தனம் இல்லாமல் தமிழ்நாட்டில் எதுவுமே இல்லை என்றாகி விட்டதையே இந்த சினிமா பாணி பிரச்சாரப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. முன்பெல்லாம் இப்படி கிடையாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு சிக்னேச்சர் பாடலை வைத்துக் கொண்டு மொத்த பிரச்சாரத்தையும் கலகலப்பாக்கி விடுகின்றனர் கட்சிகள். இல்லாவிட்டால் மக்களிடையே ரீச் ஆக முடியாது என்பது அவர்களின் வாதமாகும்.

கடைசியில் முகாரி

கடைசியில் முகாரி

மற்ற கட்சிகளும் கூட இதுபோல தங்களால் முடிந்த அளவுக்கு பிரச்சாரப் பாடல்களையும் வீடியோக்களையும் உருவாக்கி தங்களால் முடிந்ததை செய்தபடிதான் உள்ளனர். ஆனால் இப்போதைக்கு திமுக, அதிமுகவின் வீடியோ பிரச்சாரப் பாடல்கள்தான் ஹிட்டாக வலம் வருகின்றன... இப்போ ஜாலியா பாடுவது முக்கியமில்லை.. கடைசியில் "முகாரி"யில் போய் முடிந்து விடாமல் இருக்க வேண்டும்.. அதுதான் முக்கியம்!

English summary
Both DMK and AIADMK campaign songs have become viral in Tamil Nadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X