சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப கம்மி.. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக திமுகவிடம் இருப்பது இத்தனை சீட்கள்தான்

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளை வாரி வழங்கிவிட்டது திமுக. இதனால், வரும் லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும்.

வரும் லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் திமுக தலைமையில் இரு பெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அணி வகுத்துள்ளன. திமுக கூட்டணியில், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இணைந்துள்ளன.

 இழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. 2 தொகுதிகள் ஒதுக்கீடு

பாமகவை தவறவிட்டது

பாமகவை தவறவிட்டது

வாக்கு சதவீதம் அடிப்படையில், காங்கிரசை தவிர வேறு பெரிய கட்சி திமுக கூட்டணியில் இல்லை என்பது திமுக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் பாமக தலைவர்களுடன் நட்பாக இருந்தாலும் கூட, பாமகவை திமுக தனது கூட்டணிக்கு கொண்டு வருவதில் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீீட்

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீீட்

இந்த நிலையில்தான், பிற கூட்டணி கட்சிகளுக்கு, தொகுதிகளை வாரி வழங்கத் தொடங்கியுள்ளது திமுக தலைமை. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு தலா ஒவ்வொரு தொகுதியும், மதிமுகவுக்கு 2 தொகுதிகளும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புதான் முதலில் இருந்தது. ஆனால் திமுகவோ, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கும் தலா 2 தொகுதிகளை வழங்கியுள்ளது.

புத்திசாலித்தனமா

புத்திசாலித்தனமா

அதிமுக, பாஜக ஆகியவை மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும் கட்சிகள் என்பதால், இயல்பான எதிர்ப்பு அலையால், திமுக அமோக வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது. இது, திமுக தலைமையின் பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக தனித்து வெற்றி பெறுவது எளிதாக இருக்காது என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியது புத்திசாலித்தனம்தான் என்று மற்றொரு பார்வையும் முன் வைக்கப்படுகிறது.

20 தொகுதிகள்தான்

20 தொகுதிகள்தான்

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 1 தொகுதி, ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி, மதிமுகவிற்கு 1 தொகுதி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 40 தொகுதிகளில் 20 தொகுதிகள் கூட்டணிக்கே வழங்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள சூழலில், திமுக வெறும் 20 தொகுதிகளில்தான் போட்டியிட உள்ளது. இதில் சில கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டுள்ளன. அப்படி போட்டியிட்டால் திமுக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதாக அர்த்தம். அதுகுறித்து இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
DMK given half of the seats to the alliance partners, here is the detail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X