சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கேட்ட "அந்த" கேள்வி.. ஜெர்க் ஆகி... எகிறி குதித்து கமலிடம் யூடர்ன் அடித்த பாரிவேந்தர்..!

பாரிவேந்தர் கமலுடன் இணைந்த காரணம் என்னவாக இருக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கேட்ட ஒரு கேள்வி, அப்படியே ஜகா வாங்கி, யூடர்ன் அடித்து கமலிடம் போய் சேர்ந்து விட்டார் ஐஜேகே பாரிவேந்தர்.. அப்படி என்ன திமுக அவரிடம் கேட்டிருக்கும்?

வரப்போகும் தேர்தலுக்கு கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. வழக்கம்போல் இந்த முறையும் திமுக, அதிமுக கூட்டணியில்தான் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க போகின்றன. ஆனால், கூட்டணி முடிவாகவில்லை.

இந்த சமயத்தில், அமமுக டிடிவி தினகரன் ஒரு பக்கமும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஒரு பக்கமும் அணிவகுத்து நிற்கின்றனர்.

30 நிமிட வாக்குவாதம்- தேர்தலில் போட்டியிடாதே- சசிகலா உத்தரவால் ஷாக் ஆன டிடிவி தினகரன்- ஆக அடுத்து? 30 நிமிட வாக்குவாதம்- தேர்தலில் போட்டியிடாதே- சசிகலா உத்தரவால் ஷாக் ஆன டிடிவி தினகரன்- ஆக அடுத்து?

திமுக

திமுக

இதில் தினகரன் அணியில் யார் யார் இணைவார்கள் என்று தெரியவில்லை, கமல் அணியில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து விலகி பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியும் இணைந்துள்ளன.

ஐஜேகே

ஐஜேகே

இவர்கள்தான் புதிய கூட்டணிக்கான அச்சாரத்தை போட்டுள்ளனர்... இதில் சரத்குமார் எதிர்பார்த்த ஒன்றுதான், கமலை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்று கொண்டார்.. ஆனால், பாரிவேந்தர் தான் ஆச்சரியமாக இருந்தது.. கடந்த எம்பி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தவர்.. கடைசி நிமிஷத்தில் வாக்குகள் எகிறி "ஜஸ்ட் பாஸ்" ஆகி எம்பியானவர்.. இவர் ஏன் அந்த கூட்டணியில் இருந்து விலகினார்? என்பது கேள்வியாக உள்ளது. காங்கிரஸ்தான் முதலில் வெளியேறக்கூடும் என்று யூகங்கள் வலம் வரும் நிலையில் ஐஜேகே வெளியே வந்தது வியப்பை தந்தது.

பாரிவேந்தர்

பாரிவேந்தர்

விஷயம் இதுதானாம்.. கடந்த எம்பி தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டபோதே, ஏகப்பட்ட கரன்சியை தொகுதிக்குள் வாரி இறைத்தாராம்.. ஆனால், இந்த முறையும் அதைவிட அதிகமாக திமுக தரப்பில் பாரிவேந்தரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அந்த தொகையை கேட்டதுமே, அதிர்ந்து போய் விட்டாராம் பாரிவேந்தர்.. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தபோதும், பாரிவேந்தருக்கு இதே பிரச்சனைதான் வந்தது. அப்போது மோடி தமிழகம் வந்தபோது, அந்த மொத்த செலவையும் கவனித்து கொண்டது பாரிவேந்தர்தான்.

திமுக

திமுக

ஆனால் எதிர்பார்த்த பெரம்பலூர் தொகுதியை அதிமுக கூட்டணி தராததால்தான், திமுகவிடம் வந்து இணைந்தார். இங்கும் இதே பிரச்சனை வந்துள்ளதால்தான், அவர் கூட்டணியில் இருந்து எகிறியதாக தெரிகிறது.. இது உண்மை தகவலா என்று தெரியவில்லை.. ஆனால், பாரிவேந்தர் இல்லையென்றாலும் திமுகவுக்கு ஒரு கவலை இல்லை என்றும், களத்தில் படுஸ்டிராங்காக உள்ளதால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன..!

English summary
DMK Alliance and Why IJK joins in MNM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X