சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை

Google Oneindia Tamil News

சென்னை : திமுக கூட்டணியில் பாமக சேராது என்றும், அதற்கான வாய்ப்பு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சியான திமுக தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அணியில் பாமகவை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

Dmk alliance in forthcoming election, no chance of pmk in dmk alliance

ஆனால் திமுக கூட்டணியில் முரண்பட்ட இரு கட்சிகளான பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
திமுக கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை.

நெருடலும் இல்லை. கூட்டணியில் பாமகவை சேர்க்க திமுகவினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத் தெல்லாம் பேச மாட்டார்கள்.

என்னை பொறுத்தவரை திமுக கூட்டணியில் பாமக சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால் தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பாமக நினைக்கிறது.

அதனால்தான் விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக அவர்கள் வைத்துள்ளனர். திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது.

இவ்வாறு திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
dmk doest not join the pmk in coalition in the forthcoming loksabha elections, confidently said by vck president thirumavalavan. If pmk enters in to dmk alliance, then vck quit from that alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X