சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.. எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையே.. முத்தரசன் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Recommended Video

    R.S.Bharathi Arrested For His Controversial Speech | ஆர்.எஸ்.பாரதி அவரது இல்லத்தில் கைது

    இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு அவரே வருத்தம் தெரிவித்து அந்த விஷயத்தை முடித்துவிட்டார். முடிந்துபோன விஷயத்தை யாரோ ஒருவர் வழக்கு கொடுக்க காத்திருந்து அதிகாலை கைது செய்திருப்பது பழிவாங்குவது மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையாகும்.

    DMK alliance leaders Condemn the arrest of MP RS Bharathi

    இதுபோல ஏராளமான பேர் மீது வழக்குகளை கொடுத்து வைத்துள்ளார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சும்மா வைத்துள்ளார்கள். பாஜகவை சேர்ந்த எச் ராஜா போன்றோர் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். நீதிமன்றத்தை தரம் தாழ்ந்த வகையில் பேசுவார்கள். காவல்துறையினரை பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதெல்லாம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

    RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது.. வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்ததுRS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது.. வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

    ஆனால், திமுகவினர் தவறுதலாக பேசிவிட்டால் அதையே காரணமாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பது சரியல்ல. இதே போல தான் பேச்சு வழக்கில் சொன்ன ஒரு வார்த்தைக்காக நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டார்.

    ஆர்.எஸ்.பாரதி கைது செய்வது மட்டும் பிரச்சினை இல்லை. எங்களை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் மிரட்டுகிற சர்வாதிகாரப் போக்கைத்தான் இது காட்டுகிறது.

    இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை முதல்வருக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர், திருநாவுக்கரசரும், ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    திமுக எம்.எல்.ஏவான, டிஆர்பி ராஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டின் சட்டம் என்பது சக்திவாய்ந்தவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறதா? நீதி இறுதியில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Condemn the arrest of MP Thiru RSBharathi. Is the Law of the land being used for whims and fancies of the powerful !?! JusticeWillPrevail ...in the end, says TRB Rajaa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X