சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் ரெடி.. நாளை காலை அறிவிக்கிறார் ஸ்டாலின்

கூட்டணி தொகுதிகளை நாளை அறிவிக்கிறார் முக ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட திமுக கூட்டணியின் தொகுதிகளை நாளை அறிவிக்கிறார் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இருந்த இடத்திலிருந்து ஒரே ஜம்ப்.. திமுகவை விட்டு என்ஆர்டி அதிமுகவுக்கு தாவியது ஏன் இருந்த இடத்திலிருந்து ஒரே ஜம்ப்.. திமுகவை விட்டு என்ஆர்டி அதிமுகவுக்கு தாவியது ஏன்

இழுபறி

இழுபறி

இவ்வாறு கூட்டணி கட்சிகள் திமுகவில் இணைந்து ஒரு வார காலம் ஆகிவிட்டாலும், அவைகளுக்கான தொகுதிகள் இன்னும் முடிவு செய்யப்படாததால் இழுபறி நீடித்தது. இதனால் கூட்டணி தொகுதிகளை அறிவிக்க முடியாத நிலையும் எழுந்தது.

சிக்கல்

சிக்கல்

எனவே கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து அந்தந்த கட்சி நிர்வாகிகளுடன் பல கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக காங்கிரசுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் சிக்கல் நீடித்தது. அதிலும் ஒருசில தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் அடம்பிடித்ததால், கடைசியில் ராகுல்காந்தி முன்பு அவை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது.

காலை அறிவிப்பு

காலை அறிவிப்பு

இப்போது கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அனைத்தும் சுமூகமாக ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அவை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக திமுக வெளியிட உள்ளது. நாளை காலை திமுக கூட்டணியின் தொகுதிகளை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். காலை11 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்வம் கலந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

உத்தேச பட்டியல்

உத்தேச பட்டியல்


சில தினங்களுக்கு முன்பு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட போகும் தொகுதிகள் இவைதான் என ஒரு உத்தேச பட்டியல் வெளியானது. அநேகமாக இவற்றில் ஒருசில தொகுதிகள் வேண்டுமானால் மாற வாய்ப்புள்ளதே தவிர, பெருமளவு தொகுதிகள் மாற வாய்ப்பிருக்காது என்றே நம்பப்படுகிறது. அந்த உத்தேச பட்டியல் இதோ:

திமுக

1. வடசென்னை
2. தென்சென்னை
3. மத்திய சென்னை
4. வேலூர்
5. சேலம்
6. அரக்கோணம்
7. கிருஷ்ணகிரி
8. தருமபுரி
9. திருவண்ணாமலை
10. கடலூர்
11. பெரம்பலூர்
12. திருச்சி
13. திண்டுக்கல்
14. கரூர்
15. கோவை
16. பொள்ளாட்சி
17. நீலகிரி
18. நெல்லை
19. தூத்துக்குடி
20. தஞ்சாவூர்

காங்கிரஸ்:-

1. கன்னியாகுமரி
2. ஸ்ரீபெரம்புதூர்
3. மைலாடுதுரை
4. சிவகங்கை
5. தேனி
6. திருவள்ளூர்
7. காஞ்சிபுரம்
8. ஆரணி
9. விருதுநகர்
10. புதுச்சேரி

விசிக:-
1. சிதம்பரம்
2. விழுப்புரம்

மார்க்சிஸ்ட்:-
1. மதுரை
2. திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட்:-
1. நாகப்பட்டினம்
2. தென்காசி

முஸ்லீம் லீக்:-
1. இராமநாதபுரம்

ஐ.ஜே.கே:-
1. கள்ளக்குறிச்சி

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி:-
1. நாமக்கல் ( பொள்ளாச்சி மாறுவதற்கு அதிக வாய்ப்பு )

மதிமுக:-
1. ஈரோடு

English summary
MK Stalin will announce tomorrow the names of 40 constituency for DMK and Alliance Parties
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X