சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Recommended Video

    #TNElection2021 சென்னை: திமுக கூட்டணியில்.. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? உலாவரும் உத்தேச பட்டியல்!

    தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் வருகிற 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் தேர்தலுக்கு மிக குறைந்த நாட்களே உள்ளன. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் திமுகவும், அதிமுகவும் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

    தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் பிரதமரின் எண்ணம் தவறானது - ராகுல் காந்தி சாடல் தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் பிரதமரின் எண்ணம் தவறானது - ராகுல் காந்தி சாடல்

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த, திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் எ.வ. வேலு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் உடன்

    காங்கிரஸ் உடன்

    திமுக குழுவினர் காங்கிரஸ் உடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ள திமுக, இரண்டாம் கட்டமாக பேசி எத்தனை தொகுதி என்பதையும், தொகுதிகளையும், இறுதி செய்யும் என கூறப்படுகிறது. எத்தனை தொகுதி என்பது தெரியவரவில்லை. 25 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    இந்நிலையில் திமுக, தனது கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வருகை தந்தனர்.

    முஸ்லிம் லீக்

    முஸ்லிம் லீக்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் காதர் மொய்தீன், அபுபக்கர் ஆகியோருடன் பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், "
    தொகுதிகள் பற்றி நாங்கள் தெரிவிக்கவில்லை என்று எண்ணிக்கை பற்றி தான் நாங்கள் பேசினோம். இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், நாளை முடிவு எட்டிவிடும்" என்றார்.

     மனிதநேய மக்கள் கட்சி

    மனிதநேய மக்கள் கட்சி

    இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் திமுக குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "திமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததுள்ளது. கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகள் கேட்டுள்ளோம். நாளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எத்தனை இடங்கள் என்பது வெளியிடப்படும்" என்றார்

    English summary
    Already ruling party aiadmk started coalition talks with bjp, pmk and dmdk. now DMK also started coalition talks for tamil nadu assembly election 2021. dmk Calling for two parties today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X