• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஒரே மணி சத்தம்.. லிஸ்ட் போட்டு வேலை நடக்குதாமே.. திரும்பிய பக்கமெல்லாம் பிஸி.. செம எதிர்பார்ப்புகள்

|

சென்னை: அதிமுக, திமுக தரப்பில் ஒரு முக்கியமான செய்தி கசிந்து வருகிறது.. ரகசியமாக வேலை நடக்கிறதாம்.. எல்லாத்துக்கும் காரணம் பதவி மோகம்தான்..!
தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ளது.. ரிசல்ட்டுக்காக அனைவரும் காத்துள்ளனர்.. தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்ற ஆழமான நம்பிக்கையில் திமுக அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டது.

உச்சக்கட்டமாக, எங்கே பதவியேற்பு விழாவை நடத்துவது என்றுகூட தீர்மானித்து அதற்கான ஏற்பாட்டு வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.. மேலும் அடுத்து வரும் அமைச்சரவையில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்பது குறித்த லிஸ்ட்டும் ரெடியாகிவிட்டதாக தெரிகிறது.

இதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்? இதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்?

லிஸ்ட்

லிஸ்ட்

அதில், துரைமுருகன், கேஎன் நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எவ வேலு, தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், பூங்கோதை ஆலடி அருணா, பழனிவேல் தியாகராஜன், கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட 30 பேரின் பெயர்கள் முதல், சபாநாயகராக மா.சுப்பிரமணியன், துணை சபாநாயகரான டிஎம் அன்பரசன் வரை லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் தினந்தோறும் கசிந்து வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ எதற்கும் அசராமல் உள்ளார்.. அவர் மட்டும்தான் நம்பிக்கையாக இருக்கிறார்.. மற்றபடி முக்கிய புள்ளிகள், சில அமைச்சர்கள் கலக்கத்தில் இருப்பதாகவே சொல்ப்படுகிறது.. அதனால் சிறப்பு யாகங்களை செய்ய ஆரம்பித்துள்ளனராம்.. இந்த யாகங்கள் ரகசியமாகவும் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.. இதைதவிர, கோயில் கோயிலாக சென்று நேர்த்திக்கடன், பூஜைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனராம்.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

இதில் சில அமைச்சர்கள், முக்கிய துறைகளை கேட்டு பெறவும் ஐடியாவில் உள்ளனர்.. இதற்காகவும் பிரபல ஜோதிடர்களின் அட்வைஸ்களை பெற்று வருகிறார்களாம்.. இது அதிமுகவில் மட்டுமல்ல, திமுகவிலும் இருக்கிறதாம்.. இந்த முறை அமைச்சர் பதவி கிட்டாதவர்களும் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு ரகசியமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.. அதாவது எந்த பதவிக்கு எந்த யாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறதாம்.. அதைதான் இவர்கள் செய்து வருவதாக தெரிகிறது..

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில், தன்னுடைய ரூமிலேயே, ஓபிஎஸ் யாகம் வளர்த்தார் என்றார்கள்.. மீண்டும் முதல்வர் பதவியை பெறுவதற்காகவே அவர் யாகம் வளர்த்தார் என்று பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.. இதை சொன்னதே திமுக தலைவர் ஸ்டாலின்தான்.. பிறகு இதை பற்றி ஒரு விளக்கமும் ஓபிஎஸ் தந்திருந்தார்.

விளக்கம்

விளக்கம்

"என் ரூமில் எப்பவுமே சாமி கும்பிடுவேன்.. அந்த மாதிரிதான் சாமி கும்பிட்டேன்... யாகம் நடத்தவில்லை... யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் எல்லாருமே யாகம் நடத்தலாமே" என்று சொல்லி இருந்தார். ஓபிஎஸ்ஸின் கூற்று உண்மையென்றால், இன்று அதிமுக, திமுக தரப்பில் யாகங்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வருவது ஏனோ? தெரியவில்லை.. பார்ப்போம்!

English summary
DMK and ADMK leaders conduct Yagam and Pooja to get Ministers posts, say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X