சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11 கட்சிகள்.. சென்னையில் 23ம் தேதி மாபெரும் பேரணி.. ஸ்டாலின் அழைப்பு.. கூட்டத்தில் அதிரடி முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக சென்னையில் வரும் 23ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று முதல் நாளில் இருந்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த விஷயத்தில் அமைதியாக இருந்த காங்கிரஸ், திமுக கட்சியும் தற்போது தீவிரமாக போராட்டம் செய்ய தொடங்கி விட்டது.

மிக முக்கியமாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை போராட்டம்

சென்னை போராட்டம்

திமுக சார்பாக நேற்று சென்னை உட்பட தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. சென்னையில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஆ ராசா ஆகியோர் போராட்டம் நடத்தினார்கள்.

திமுக தலைமை

திமுக தலைமை

இன்று சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்னையில் பிரம்மாண்ட ஆலோசனை நடத்தினார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், வைகோ, கேவி தங்கபாலு, காதர் முஹைதீன், திருமாவளவன், ரவிக்குமார், ஈஸ்வரன், ஜி ராமகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடந்தது. இந்த சட்டத்தின் சிக்கல்களை இவர்கள் ஆலோசித்தனர்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதன்படி குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பாக சென்னையில் வரும் 23ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

11 கட்சி

திமுக கூட்டணியில் இருக்கும் 11 கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களும், தலைவர்களும் இதில் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்ளலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
DMK called for all-party meeting today in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X