சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக சபாநாயகர் வேட்பாளராக அப்பாவு அறிவிப்பு... துணை சபாநாயகர் பதவிக்கு கு பிச்சாண்டி போட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு மு. அப்பாவு, துணைச் சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Who Is Appavu? | Radhapuram MLA to Tamilnadu Assembly Speaker | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக மே 7ஆம் தேதி பதவியேற்றார்.

    DMK announces Rasipuram MLA Appavu as its candidate for Speaker of TN assembly

    இதையடுத்து 16ஆவது சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் பதவிகளுக்கான தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பட்டியல் வெளியான போதே மூத்த உறுப்பினரான ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு மு. அப்பாவு, துணைச் சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தியில் வெளியேறிய ஓபிஎஸ்!எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி- எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தியில் வெளியேறிய ஓபிஎஸ்!

    இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 12-5-2021 அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக ராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு- துணைத் தலைவராக கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    DMK announces its Speaker and deputy speaker candidate of TN assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X