சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக பொதுக்குழு... சீனியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளா? மா.செ.க்களுக்கு தலைமை கழக பதவியா?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. என்ன காரணம்?

    சென்னை: திமுகவின் பொதுக்குழு அக்டோபர் 6-ந் தேதி கூடுதல் நிலையில் கட்சியின் சீனியர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுமா? என்பது அக்கட்சியினரிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

    திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 6-ல் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இப்பொதுக்குழுவில் கட்சியின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் திமுகவில் சீனியர்களுக்கான பொறுப்புகளில் மாற்றம் இருக்குமோ? என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    பொதுச்செயலர் பதவியில் மாற்றம்?

    பொதுச்செயலர் பதவியில் மாற்றம்?

    திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் முதுமையால் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரது பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் அல்லது அவரது பதவிக்கு இணையான ஒரு பதவி உருவாக்கப்படலாம் என்கிற கருத்து நிலவுகிறது. இதற்கான சட்ட திருத்தங்கள் கொண்டுவர வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.

    மா.செ. ஒருவருக்கு தலைமை பதவி

    மா.செ. ஒருவருக்கு தலைமை பதவி

    அதேபோல் மாவட்ட செயலாளர்களில் ஒருவருக்கு தலைமை கழக பதவி தரப்படலாம் என்றும் ஒரு தகவல் வலம் வருகிறது. இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:

    எந்த மாற்றமும் இல்லை?

    எந்த மாற்றமும் இல்லை?

    கட்சியில் அவருக்கு பதவி கிடைக்கும்.. இவருக்கு பதவி கிடைக்கலாம் என்கிற பேச்சு இருக்கிறது உண்மைதான். ஆனால் பொதுச்செயலாளர் பதவியைப் பொறுத்தவரை எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய தலைமை திட்டவட்டமாக விரும்பவில்லை.

    இதுதான் தலைமையின் விருப்பம்

    இதுதான் தலைமையின் விருப்பம்

    திமுகவின் பொதுச்செயலாளராகவே பேராசிரியர் இறுதிக்காலம் வரை நீடிக்க வேண்டும் என்பதுதான் தலைமையின் எண்ணமும் கூட. தற்போதைய பொதுக்குழு என்பது ஆண்டுதோறும் கூட்டப்படுகிற ஒன்றாகத்தான் இருக்கும்.

    உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதம்

    உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதம்

    இதில் உள்ளாட்சித் தேர்தல் முதன்மையாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இளைஞரணிக்கான ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்படக் கூடும். மற்றபடி பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது என்கின்றன.

    English summary
    Sources said that DMK may to amended its Bylaws in Oct. 6 General Council meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X