சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழி இல்லத்தில் நடைபெற்ற திமுக தொண்டன் திருமணம்... எளிய முறையில் ஏற்பாடு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியின் இல்லத்தில் அக்கட்சியின் தொண்டர் ஒருவரின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.

Recommended Video

    DMK Cadre Marriage held at Kanimozhi house

    திமுகவை பொறுத்தவரை பொறுப்பில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும், கட்சியின் மூத்த முன்னோடிகளும் தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தேதி பெற்று நடத்துவது வழக்கம். வசதியில்லாத நிலையில் கட்சிமீது தீராத பற்றுடன் இருக்கும் ஒரு சில தொண்டர்கள், தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் நிச்சயித்தால் மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கே மணமக்களை அழைத்துச் சென்று அவரது முன்னிலையில் திருமணத்தை நடத்துவார்கள்.

    dmk cadre marriage held at Kanimozhi house

    அதாவது கட்சித் தலைவர் முன்னிலையில் அவரது வாழ்த்துடன் தொண்டர்கள் இல்ல மணவிழா நடைபெறுவது கருணாநிதி காலம் தொட்டு திமுகவில் உள்ள ஒரு நடைமுறைதான். கோபாலபுரம், ஆழ்வார்பேட்டையில் இவ்வாறு கட்சி தொண்டர்கள் திருமணங்கள் நடைபெறுவது புதிதல்ல. ஆனால் சிஐடி காலனியில் நடைபெற்றிருப்பதை தான் கட்சியினர் சற்று புதிதாக பார்க்கின்றனர்.

    dmk cadre marriage held at Kanimozhi house

    இதனிடையே சிஐடி காலனி இல்லத்தில் தனது முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு பட்டுச்சேலை, பட்டுவேட்டி சட்டை, மற்றும் பழங்களை தட்டில் வைத்து பரிசாக கொடுத்தார் கனிமொழி. மேலும், வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும் என வாழ்த்தினார். சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் இந்த திருமணத்தில் மணமக்கள் வீட்டு சார்பில் 5 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதனிடையே கனிமொழி தலைமையேற்று தனது இல்லத்தில் வைத்து திமுக தொண்டரின் திருமணத்தை நடத்தி வைத்தது அவரது தயார் ராஜாத்தி அம்மையாருக்கு நெகிழ்ச்சியை அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    English summary
    dmk cadre marriage held at Kanimozhi house
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X