சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரசாந்த் கிஷோர் செய்த உருப்படியான வேலை இது மட்டுமே... நொந்துகொள்ளும் உ.பி.க்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோர் உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கும் இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் இதுவரை பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் தனது பணியை முழுவீச்சில் தொடங்கியது போல் தெரியவில்லை.

சென்னை அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம் வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம் வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு

விளம்பரம்

விளம்பரம்

இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்களின் மோஸ்ட் வாண்டட் தேர்தல் வியூக வகுப்பாளராக திகழ்பவர் பிரசாந்த் கிஷோர். இவர் இப்போது திமுகவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தனது ஜாகையை தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். தனது டீமை வைத்து முதற்கட்ட பணிகளை மட்டுமே அவர் செய்துள்ளார். இன்னும் முழு வீச்சில் தனது செயல்பாட்டை இங்கு அவர் தொடங்கவில்லை என்றே கூறலாம். காரணம் ஐ பேக் நிறுவனத்துக்கு தமிழகத்தில் பணியாற்றி இன்னும் சரியான டீம் உருவாகவில்லை. இப்போதுதான் ஆட்கள் தேர்வு நடத்திக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.

ஒருங்கிணைப்பு

ஒருங்கிணைப்பு

சமூக வலைதளங்களில் குறிப்பாக ட்வீட்டர், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் திமுகவினர் மட்டுமல்லாமல் திமுக ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. # ஒன்றிணையுங்கள் திமுக நட்புகளே என்ற ஹேஷ்டேக்குடன் திமுக அனுதாபிகள் அனைவரும் ஒருவரை ஒருவர் பின் தொடர தொடங்கியுள்ளனர். இதற்கு பின்னணியில் பிரசாந்த் கிஷோர் டீம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்ற முழக்கத்துடன் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

உருப்படியாக

உருப்படியாக

இதனிடையே இது தொடர்பாகவும், பிரசாந்த் கிஷோர் டீம் பணிகள் பற்றியும் பேசிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், பிரசாந்த் கிஷோர் வருகையால் ஏதோ மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து விடும் என என்னை போல் பலரும் எண்ணினோம். ஆனால் அவர் நாங்கள் நினைத்தபடி இல்லை என்பது அவரது செயல்பாடுகள் மூலம் தெரிய வருகிறது. இப்போது திமுக அபிமானிகளை ஒன்றுப்படுத்தும் வேலையை அவர் செய்கிறார், இது ஒன்று தான் அவர் செய்த உருப்படியான வேலையாக நான் கருதுகிறேன். ஆனால் இதைக்கூட அவர் வந்து சொல்லித்தான் நாம் செய்ய வேண்டியதை நினைத்தால் வருத்தமாக உள்ளது என்றார்.

ஸ்டாலின் தயார்

ஸ்டாலின் தயார்

இன்றுள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்ககூடியவர்களில் ஸ்டாலினும் ஒருவர். பயணத்திற்கு சலிக்காதவர், மக்களை சந்திக்க அஞ்சாதவர், ஆனால் அப்படியிருந்தும் பிரசாந்த் கிஷோர் அதனை பயன்படுத்த தவறுவதாக முனுமுனுப்பு எழுகிறது.சட்டமன்றத் தேர்தல் டிசம்பரில் நடைபெறக் கூடும் என ஒரு பக்கம் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கும் சூழலில் பி.கே. அண்ட் கோ இன்னும் தனது பணியை தொடங்காமல் காலதாமதம் செய்வது உடன்பிறப்புகளை பொறுமை இழக்கச் செய்கிறது.

English summary
dmk cadres anad ex mla criticize prashant kishor team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X