நெஞ்சுக்கு நீதி ரிலீஸ்! உதயநிதியை வியக்க வைத்த "தமிழரசி".. டிக்கெட்டை லாக் செய்த "பாலா".. அடேங்கப்பா
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் இன்று வெளியான நிலையில், இந்த படத்திற்காக ஆளும் திமுகவினர் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம்.
இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த படம் ஆர்டிக்கள் 15. பாலியல் வழக்கு ஒன்றை விசாரிக்க போய், அதில் நிரம்பி கிடைக்கும் ஜாதி அவலங்களை இந்த படம் தோலுரித்து காட்டியது.
ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்
வடக்கில் இப்படி ஒரு படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த நிலையில்தான் அதை தமிழில் மொழி பெயர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த படம்தான் போனிகபூர் தயாரிப்பில், அருண்குமார் காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்று படமாக வெளியாகி உள்ளது.

ஆயுஷ்மான்
ஆயுஷ்மான் நடித்த பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இடையில் அரசியல், தேர்தல் காரணமாக பிசியாக இருந்த உதயநிதி இப்போது மீண்டும் படத்தை வெளியிட்டு இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்த படத்தில் ஜாதிக்கு எதிராக பேசும் கடுமையான வசனங்கள் இடம்பெற்று இருப்பது டிரெய்லரில் தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆன நிலையில்தான் இந்த படத்திற்காக ஆளும் திமுகவினர் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம்.

திமுக டிக்கெட்
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பாக டிக்கெட்டுகள் வாங்கப்பட்டு இலவசமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் சார்பாக டிக்கெட்டுகள் மொத்தமாக காசு கொடுத்து வாங்கப்பட்டு அதை மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றனராம். திமுக நிர்வாகிகள் பலருக்கும் இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறதாம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று திமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

படம் கொண்டாட்டம்
இந்த படம் நல்ல கதை கொண்ட படம். ஏற்கனவே ஹிட் அடித்த கதைதான். படம் கண்டிப்பாக ஹிட் ஆகும். இருந்தாலும்.. எங்கள் கட்சி எம்எல்ஏ.. முக்கிய தலைவர்.. அதனால் மொத்தமாக டிக்கெட் வாங்கி இலவசமாக கொடுக்கிறோம் என்று திமுக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். அதிலும் மதுரையில் திமுக நிர்வாகி எஸ். பாலா சார்பாக இலவசமாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வருகிறதாம். இதை அவரே போஸ்டர்அடித்துள்ளார்.

இலவச டிக்கெட்
கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்கிறோம். இந்த நம்பருக்கு கூப்பிடுங்கள் என்று போஸ்டரில் ஒட்டி உள்ளனர். இது போக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இன்று மாலை காட்சிக்கான மொத்த டிக்கெட்டையும் அவர் பகுதியில் வாங்கி உள்ளார். திமுக நிர்வாகிகளை மொத்தமாக அழைத்து சென்று படம் பார்க்க உள்ளனராம்.

இம்ப்ரஸ் செய்ய பிளான்
இது போக வழக்கம் போல திமுகவினர் சார்பாக ஆளுயர கட்டு அவுட்கள், பெரிய கேட் அவுட்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் குளிர்ந்து போகும் வகையில் திமுகவினர் பல இடங்களில் இந்த படத்திற்கு ஓப்பனிங் கொடுத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவிற்குள் பெரிய வாய்ஸ் இருக்கிறது. அவர் விரைவில் அமைச்சர் வேற ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவரை இம்ப்ரஸ் செய்யும் வகையில் இப்போது மொத்தமாக டிக்கெட் வாங்கி அதை இலவசமாக கொடுத்து வருகிறார்களாம்.