சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை!

Google Oneindia Tamil News

Recommended Video

    திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா-வீடியோ

    சென்னை: திமுகவின் முப்பெரும் விழாக்களில் வழக்கமாக பின்பற்றப்படும் நிகழ்ச்சி நடைமுறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது அக்கட்சியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

    திமுகவின் முப்பெரும் விழாக்களில் பொதுவாக கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி என அனைத்தும் இடம்பெறும். இம்முறை திருவண்ணாமலை முப்பெரும் விழாவில் இதே பாணி கடைபிடிக்கப்பட்டது.

    DMK cadres shocked over Thiruvannamalai Mupperum Vizha programmes

    ஆனால் வழக்கமாக அத்தனை நிகழ்ச்சிகளிலும் திமுகவின் பேச்சாளர்கள், இசை நிகழ்ச்சி நடத்துவோர்தான் இடம்பெறுவர். இம்முறை பெரும்பகுதி வெளியில் இருந்து அழைக்கப்பட்ட பிரமுகர்கள்.

    பொதுவாக திமுக நிகழ்ச்சிகளில் மாலையில் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது முழுவதும் திமுகவின் கொள்கை பிரசார பாடல்கள், சாதனைப் பாடல்கள் இடம்பெறும். ஓடி வருகிறான் உதயசூரியன், அழைக்கின்றார் அண்ணா போன்ற பாடல்கள் இன்னமும் திமுகவினரை உற்சாகப்படுத்தும் தேசிய கீதங்களாகவே இருக்கின்றன.

    மாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    இம்முறை திரை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திமுகவின் கொள்கை பிரசார பாடல்கள் மிஸ்ஸிங். பட்டிமன்றத்துக்கு கூட வாடகை பேச்சாளர்கள்தான்.. திமுகவின் வழக்கமான பார்மேட்டை மாற்றி திருவண்ணாமலை முப்பெரும் விழா நடத்தப்பட்டிருக்கிறது.

    இதனால் இனி திமுகவில் தங்களுக்கு எதிர்காலம் என்பது இருக்கிறதா? இல்லையா? என்கிற கேள்விக்குறியோடு விட்டத்தைப் பார்க்கின்றனர் காலந்தோறும் பேச்சாளர்களாக, கொள்கை முரசுகளாக வலம் வந்தவர்கள்.

    English summary
    DMK cadres were shocked over the Thiruvannamalai Mupperum vizhaa's programmes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X