• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்ன நடக்குது.. கலைஞர் காத்த திமுகவா இது? யார் வந்தாலும் கதவை திறந்து விட்றதா.. குமுறும் தொண்டர்கள்

|

சென்னை: "கார்ப்பரேட் ஐ.டி கம்பெனிகளில் மட்டுமே இந்த மாதிரி நபர்கள், உடனடியாக விலகி இன்னொரு கம்பெனிக்கு போவார்கள். .. கலைஞர் கட்டிக்காத்த திமுகவும் இப்படியா ? யார் வந்தாலும் கதவை திறந்து வெச்சிடலாமா? பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சூட்டோடு சூட்டாக பொறுப்பும் தந்துவிட்டால், ஊழல் இல்லாத ஆட்சியை இவர்களால் மட்டும் எப்படி உருவாக்க முடியும் ? " என்று பி.டி. அரசகுமாருக்கு பொறுப்பு அளித்தது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

அதில், தலைமை கழக செய்தித்தொடர்பு செயலாளராக பி.டி.அரசகுமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.. இது திமுக தரப்பில் சில நிர்வாகிகளுக்கு அதிருப்தியை தந்துள்ளதாக தெரிகிறது.. அது மட்டுமல்ல, நடுநிலையாளர்களும் அரசகுமாருக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளது குறித்து நம்மிடம் சொன்னதாவது:

எடப்பாடியாரை வழிக்கு கொண்டு வந்த 11 பேர்.. பஞ்சாயத்து முடிவுக்கு வர இதுதான் முக்கிய காரணமாமே!

 அரச குமார்

அரச குமார்

"இவர் அன்னைக்கு வெறும் குமாரா தான் இருந்தார்.. மக்கள் முன்னாடி தன்னை காட்டிக்க நிறைய செயல்பாடுகளில் ஈடுபட்டார்.. கல்வி நிறுவனங்களில் அவர் கவனம் திரும்பியது.. அப்போதான் நிறைய தொழிலதிபர்கள் அறிமுகம் கிடைச்சது.. ஆரம்பத்தில் திமுகவில் தான்இருந்தார்.. அப்பறம், அதிமுகவுக்கு போனார்.. பணமோசடி வழக்கு இவர் மீது விழுந்ததும், அங்கேயும் விரிசல்.

திமுக

திமுக

அப்பறம் சொந்தமா கட்சி ஆரம்பிச்சார்.. அதையும் சரியா நடத்த முடியாம, அந்த கட்சியை கூண்டோடு கலைச்சுட்டு பாஜகவுடன் வந்து சேர்ந்தார்.. இப்படி எந்த கட்சியிலுமே நிரந்தரமா இல்லாதவருக்கு இப்படி திமுக பொறுப்பு தந்ததுதான் ஆச்சரியமா இருக்கு.. மற்ற கட்சிகளில் இருந்து வருவோரை ஆராயாமல், அங்கு அவர்கள் செய்திருக்கும் களப்பணி உட்பட எதையுமே அறிந்து கொள்ளாமல், திமுக உடனே யாராக இருந்தாலும் கட்சியில் சேர்த்து கொள்கிறது.. அத்துடன், உடனடியாக அவர்களுக்கு பதவியும் தந்துவிடுகிறது.

பாஜக

பாஜக

இவர்தான் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் வேண்டும் என தமிழுக்கு எதிராக வழக்கு போட்டவர்.. செக் மோசடி, பண மோசடி இப்படி இவர்மீது நிறைய இருக்கிறதா சொல்றாங்க.. இனி திமுக தான் வருங்காலம்னு நினைச்சிட்டாரு.. அதனால இங்க வந்து சேர்ந்துட்டார்.. இந்த மாதிரி நபர்களை எல்லாம் பாஜகதான் சேர்த்து வந்தது.. இப்போது திமுகவும் இப்படி இறங்கிவிட்டது வேதனையாக இருக்கிறது.

 கார்ப்பரேட்

கார்ப்பரேட்

கார்ப்பரேட் ஐ.டி கம்பெனிகளில் மட்டுமே இந்த மாதிரி நபர்கள், உடனடியாக விலகி இன்னொரு கம்பெனிக்கு போவார்கள். .. கலைஞர் கட்டிக்காத்த திமுகவும் இப்படியா ? யார் வந்தாலும் கதவை திறந்து வெச்சிடலாமா? இந்த மாதிரி ஆட்களை உள்ளே சேர்த்து, சூட்டோடு சூட்டாக பொறுப்பும் தந்துவிட்டால், ஊழல் இல்லாத ஆட்சியை இவர்களால் மட்டும் எப்படி உருவாக்க முடியும் ? " என்று வேதனையோடு தெரிவித்தனர்.

நியமனம்

நியமனம்

ஆனால், பி.டி. அரசகுமார் நியமனத்தை திமுக தரப்பில் பலரும் வரவேற்றுள்ளனர்.. "எதையும் ஆராயாமல் திமுக தலைமை செய்வதில்லை.. இந்த முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முடிவில் இருக்கும்போது, இதெல்லாம்கூட யோசிக்காமல் இருப்பார்களா என்ன? அரசகுமார் நிறைய அரசியல் அனுபவம் பெற்றவர்.

 உடன்பிறப்புகள்

உடன்பிறப்புகள்

பலகாலம் விசுவாசமாக இருந்த முக்கிய நபர்களே, இங்கிருந்து பாஜகவுக்கு தாவும்போது, ஏன் அங்கிருந்து மூத்த தலைவர்கள் இங்கே வரக்கூடாது? நாலும் அறிந்துதான் திமுக இந்த முடிவை செய்து பொறுப்பும் தந்திருப்பார்கள்.. அதனால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிடக்கூடாது" என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK cadres upset over the post given to BT Arasakumar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X