சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சியில் பரபரப்பு.. இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவுக்கு அனுமதி மறுப்பா?

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் செந்தில் பாலாஜி போராட்டம் செய்து வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: செந்தில் பாலாஜி இப்போது நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்தினால் அரவக்குறிச்சியே பரபரத்து காணப்படுகிறது. நாளை இறுதி கட்ட பிரச்சாரத்துக்கு திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இந்த உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

4 தொகுதி பிரச்சாரத்தில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

நாளைக்குதான் பிரச்சாரம் செய்ய கடைசி நாள். அதனால் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் 12 இடங்களிலும் திமுக நட்சத்திர பேச்சாளர்கள் 28 இடங்களிலும் என மொத்தம் 40 இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து பேசி ஓட்டு கேட்க முடிவானது.

நாதுராம் கோட்சே தேசபக்தரா?.. பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் நாதுராம் கோட்சே தேசபக்தரா?.. பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

36 மணி நேரம்

36 மணி நேரம்

இதற்காக முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் பொதுவாக இதுபோன்ற விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 36 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி வழங்கிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஜோதிமணி

ஜோதிமணி

ஆனால் தொடர்ந்து அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டும் செந்தில்பாலாஜிக்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் இன்று காலை முதல் இப்போது வரை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அனுமதி கேட்டு காத்திருக்கிறார். அவருடன் ஜோதிமணியும் உட்கார்ந்திருக்கிறார்

ஆலோசனை

ஆலோசனை

தேர்தல் அலுவலரோ, இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து அவர்கள் அனுமதித்த பிறகே உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என செந்தில் பாலாஜியிடம் கூறியுள்ளார்.

பொருந்தாத வேலை

பொருந்தாத வேலை

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி "ஆளுகின்ற அதிமுக அரசின் அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, திமுகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து விடலாம் என்று கணக்கு போட்டு, இதுபோன்ற தேர்தல் நடைமுறைக்குப் பொருந்தாத வேலைகளை செய்து வருகிறார்கள்.

ஆலோசனை

ஆலோசனை

காலையிலிருந்து நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நேரம் அவங்க பதில் தரும் வரை காத்திருப்போம். அப்படி பதில் முறையாக தராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுத்து அதன்படி செயல்படுவோம். இது சம்பந்தமாக கட்சி மேலிடத்திலும் வக்கீல்களிடமும் ஆலோசனை செய்து வழக்கு தொடுக்க முடிவு செய்வோம்" என்றார்.

English summary
DMK Candidate Senthil Balaji and Jothimani protest at Aravakurichi taluk office today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X