சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்!

லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கும் எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் நேர்காணல் செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கும் எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மூலம் நேர்காணல் செய்யப்பட்டார்.

லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட எம்.பி கனிமொழி முடிவு செய்து உள்ளார்.
தற்போது அவர் இதற்காக விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார். கடந்த வாரம் அவர் விருப்பமனுவை இதற்காக தாக்கல் செய்தார்.

திமுகவின் ராஜ்யசபா எம்பியாக கனிமொழி இருக்கிறார். இவரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி முடிவெடுத்துள்ளார்.

அட முதல் நாளே டிரெண்டான டார்ச் லைட்.. கொண்டாடும் மநீம தொண்டர்கள்..கிண்டலுக்கும் குறைவில்லை! அட முதல் நாளே டிரெண்டான டார்ச் லைட்.. கொண்டாடும் மநீம தொண்டர்கள்..கிண்டலுக்கும் குறைவில்லை!

மிக தீவிரம்

மிக தீவிரம்

திமுக தற்போது போட்டியிடும் வேட்பாளர்களை தீவிரமாக தேர்வு செய்து வருகிறது. இதற்கான விருப்பமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி முடிந்து உள்ளது. திமுக சார்பாக நேற்று முக்கிய உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உட்பட பலர் இதுவரை விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

நேர்காணல் நடந்தது

நேர்காணல் நடந்தது

இந்த நிலையில் இன்று திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. மனுத்தாக்கல் செய்த உறுப்பினர்களை எல்லோரையும் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து இருந்தார். திமுக தலைமைக்கு கழக உறுப்பினர்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.

கனிமொழி நேர்காணல்

கனிமொழி நேர்காணல்

திமுக வேட்பாளர் நேர்காணலில் எம்.பி கனிமொழிமும் இன்று கலந்து கொண்டார். அவரிடம் திமுக உறுப்பினர்கள் நேர்காணல் செய்தனர். 15 நிமிடம் இந்த நேர்காணல் நடந்தது.

என்ன கேள்வி

என்ன கேள்வி

எம்.பி கனிமொழியிடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்காணல் செய்தார். தூத்துக்குடிக்கு என்ன செய்வீர்கள் என்று ஸ்டாலின் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதேபோல் தூத்துக்குடி தொகுதி குறித்தும் அவரிடம் கேள்விகளை ஸ்டாலின் கேட்டார் என்று தெரிகிறது. லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி மட்டுமே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்

English summary
DMK chief M K Stalin interviews MP Kanimozhi who applied to contest in Tuticorin in Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X