சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருக்கு.. கறி விருந்து இருக்கு.. நீளும் பெரிய லிஸ்ட்! திமுக பொதுக்குழு முன்னேற்பாடுகள் விறு விறு!

Google Oneindia Tamil News

சென்னை: அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் சைவம், அசைவம் என இரண்டு விதமான விருந்துகள் கொடுப்பது பற்றி திமுக தலைமை ஆலோசித்து வருகிறதாம்.

மட்டன், சிக்கன், என ஒரு பெரிய லிஸ்டை ரெடி செய்து, மெனு கார்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அறிவாலயம் நிர்வாகிகள் அதனை இறுதி செய்வதில் பரபரப்பாக இருக்கிறார்களாம்.

திமுக பொதுக்குழுவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவியிடங்களுக்கும் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்றல் தவழும் தென்காசி! கட்டுக்கட்டாக குவிந்த புகார்கள்! திமுக மா.செ.க்கு அரணாக நின்ற அமைச்சர்!தென்றல் தவழும் தென்காசி! கட்டுக்கட்டாக குவிந்த புகார்கள்! திமுக மா.செ.க்கு அரணாக நின்ற அமைச்சர்!

திமுக பொதுக்குழு

திமுக பொதுக்குழு

திமுக உட்கட்சித் தேர்தலை ஒரு வழியாக சுமூகமாக நடத்தி முடித்துள்ளது தலைமை. கிளைக்கழகம் தொடங்கி மாவட்டச் செயலாளர் பதவி வரை எந்த அசம்பாவிதமும் நிகழாமல் போட்டியாளர்களை அழைத்துப் பேசி அணுசரனையாக நடந்து கொண்டதால், அடிதடிகள் இல்லாத பெரியளவில் சண்டை சச்சரவுகள் இல்லாத உட்கட்சித் தேர்தலை நடத்தியுள்ளது திமுக தலைமை. இதனிடையே சூட்டோடு சூடாக திமுக பொதுக்குழுவையும் நடத்தவுள்ளார் ஸ்டாலின்.

அக்டோபர் 9

அக்டோபர் 9

அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள விங்ஸ் கன்வென்ஷன் செண்டரில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் விறு விறுப்படைந்துள்ளன. திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் வெஜ், நான் வெஜ் என இரண்டு விதமான விருந்துகள் வைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக பிரபல ஹோட்டல் மற்றும் கேட்டரிங் நிறுவனத்தினருடன் பேச்சு நடந்து வருகிறதாம்.

மெனு கார்டு

மெனு கார்டு

திமுக பொதுக்குழு நடைபெறும் அன்று என்ன மாதிரியான மெனுவில் உடன்பிறப்புகளுக்கு விருந்து கொடுக்கலாம் என்ற ஆலோசனை அறிவாலயத்தில் தீவிரம் அடைந்துள்ளது. மட்டன், சிக்கன், என ஒரு பெரிய லிஸ்ட் ரெடி செய்யப்பட்டாலும் அது திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் பார்வைக்கு சென்ற பின்னர் அவர் அதில் இறுதி செய்வார் எனத் தெரிகிறது. இந்தப் பொதுக்குழுவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவியிடங்களுக்கும் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாக் கோலம்

திருவிழாக் கோலம்

திமுக பொதுக்குழுவை திருவிழா போல் கொண்டாடுவது அக்கட்சியினரின் வழக்கமாகும். பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அரங்கத்திற்குள் அனுமதி என்றாலும் பொதுக்குழு நடைபெறும் வளாகத்தில் சாதாரண உறுப்பினர்களும், மற்ற நிர்வாகிகளும் திரள்வது வாடிக்கையாகும். இதனால் காவல்துறை தரப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

English summary
The DMK leadership is considering giving two kinds of feast, vegetarian and non-vegetarian, in the DMK General Assembly to be held on October 9.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X