சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி!

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவிற்கு பின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவிற்கு பின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சித் தலைவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இரண்டு நாட்கள் முன் இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். 2000 திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கடைசியில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்தார்.

ஸ்டாலின் வீடியோ

ஸ்டாலின் வீடியோ

இந்த நிலையில் தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். குடியுரிமைச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற தலைப்பில் இந்த வீடியோ யூ டியூபில் வெளியாகி உள்ளது. இந்த சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கி இருந்தார்.

என்ன பேசினார்

இந்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்கள், திமுகவின் சென்னை போராட்டம் குறித்தும் ஸ்டாலின் இதில் விளக்கம் அளித்தார். ஒரு நாட்டில் அகதிகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் , 1955ம் வருஷத்திற்கு பின் இந்த சட்டத்தை திருத்தியது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்டார்.

தலைவர் ஸ்டாலின்

தலைவர் ஸ்டாலின்

பொதுவாக திமுக தலைவர் ஸ்டாலின் எழுத்து அறிக்கை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது வீடியோ மூலம் அறிக்கை வெளியிட்டு ஸ்டாலின் அதில் பேசி இருக்கிறார். அவரின் இந்த வீடியோ தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி உள்ளது.

ஆங்கிலம் உள்ளது

ஆங்கிலம் உள்ளது

இந்த வீடியோவில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் இருக்கிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் ஸ்டாலினின் வீடியோ வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இந்த சட்டத்தை எதிர்க்கும் வேறு மாநில மக்கள் பலர் ஸ்டாலினின் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.

வீடியோ முயற்சி

வீடியோ முயற்சி

தமிழக அரசியலில் இந்த வீடியோ முயற்சி புதிதாக பார்க்கப்படுகிறது. முதலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான் லோக்சபா தேர்தலின் போது இதுபோன்ற பிரச்சார வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த வீடியோக்கள் பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது அதேபோல் ஸ்டாலின் வீடியோ வெளியிட தொடங்கி உள்ளார்.

தேர்தல் ஆலோசகர்

தேர்தல் ஆலோசகர்

இந்த ஸ்டாலினிற்கு தேர்தல் ஆலோசகராக இணைந்து இருக்கும் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா என்பது குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களில் இதேபோல் அரசியல் தலைவர்கள் பேசும் வீடியோக்கள் வைரலாகி உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகனிடம் பிரசாந்த் கிஷோர் இதேபோன்ற ஐடியாக்களை பகிர்ந்து இருக்கிறார்.

செம வைரல்

செம வைரல்

அந்த வீடியோக்கள் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதேபோல் தேர்தலிலும் ஜெகன் மோகன் அபரா வெற்றி பெற்றார். அதே பாணியை தற்போது ஸ்டாலின் கடைபிடிக்க தொடங்கி உள்ளார். இது கண்டிப்பாக வேலை செய்யும் என்று பிரசாந்த் கிசோர் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் இன்னும் இளைஞர்களை கவரும் வகையில் திமுக புதிய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை செய்யும் என்று கூறுகிறார்கள்.

English summary
DMK chief MK Stalin's video on Citizenship Amendment is an idea of Prashant Kishor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X