சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசைக் கண்டித்து நாளை கருப்பு பேட்ஜ் அணிவீர்... திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசைக் கண்டித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிந்து அவரவர் வீடுகளுக்கு முன்பு 10 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், மதுக்கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை நோய் தடுப்பில் காட்டவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசின் அணுகுமுறை

அரசின் அணுகுமுறை

கொரோனா விவகாரத்தில் அதிமுக அரசின் அணுகுமுறைகளையும், முடிவுகளையும், பார்த்தால் அது தொடர்பான முழுமையானபார்வையும், எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பும் போதிய அளவுக்கு இல்லை என்று தோன்றுகிறது. புள்ளிவிவரங்களை சொல்லி சமாதானப்படுத்தும் முயற்சி தெரிகிறதே தவிர அடிப்படையான உண்மைகளை வெளியிடும் எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.

அறிவியல் பூர்வமான

அறிவியல் பூர்வமான

அதிமுக அரசில் அறிவியல் பூர்வமான ஒருங்கிணைப்பு இல்லை; அதிகாரத்தை மையப்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்துவதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், வல்லுநர்கள் மற்றும் சான்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை பரிசீலனை செய்யும் மனநிலையில் இல்லை. தாமதமாகவேனும் உணரும் நிலைமை இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் காணப்படவில்லை.

கண்டனம்

கண்டனம்

மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சமூக தொற்று மேலும் பரவலாகும் வாய்ப்பே அதிகம் என்பதால் அரசின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், கொரோனோ போரில் முன்கள வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத தமிழக அரசின் மெத்தனத்தை கண்டிக்கிறோம்.

வீடுகளுக்கு முன் முழக்கம்

வீடுகளுக்கு முன் முழக்கம்

மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை திறப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசைக் கண்டித்தும் நாளை மே 7-ம் தேதி அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து, காலை 10 மணிக்கு அவரவர் வீடுகளுக்கு முன்பு நின்று 5 பேருக்கு மிகாமல் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்புவது என திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

கண்கள் திறக்கட்டும்

கண்கள் திறக்கட்டும்

திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் கருப்புச்சின்னம் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக மக்கள் அணியப்போகும் கருப்புச்சின்னம் அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும்

English summary
dmk coalition party to protest tomorrow againist tn govt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X