சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1500 கொடுக்கப்படுமா?... அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் ஜெயக்குமார்?

    சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேட்டி அளித்ததாக திமுக வழக்கறிஞர் அணி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1500 கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    DMK complains against Minister Jayakumar on violation of Election Code of Conduct

    அடுத்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    இதற்கிடையே, தமிழகத்தின் பிரதான கட்சிகள் மாறி, மாறி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து தி.மு.க. வழக்கறிஞர் கிரிராஜன் தலைமையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    வாகன சோதனையில் ரூ.12.8 கோடி பறிமுதல்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் வாகன சோதனையில் ரூ.12.8 கோடி பறிமுதல்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கிரிராஜன், அ.தி.மு.க.வுக்கு ஓட்டளித்தால் மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என மக்களை தூண்டும் வகையில் ஜெயக்குமார் பேட்டி அளித்ததாகத் தெரிவித்தார்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருப்பதை திரித்துக் கூறி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் கூறினார்.

    English summary
    Complaint against Minister Jayakumar,on behalf of DMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X