• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதான் ஸ்டாலின்.. ஒரே உத்தரவு தான் போட்டார்.. சரஸ்வதி தம்பி, தங்கை படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட திமுக

|

சென்னை: இதான் ஸ்டாலின்... ஒரே ஒரு உத்தரவு தான் போட்டார்.. அடுத்த செகண்டே திமுகவினர் படுகொலை செய்யப்பட்ட சரஸ்வதி வீட்டுக்கு விரைந்து சென்று, ஆறுதல் சொல்லியதுடன், சரஸ்வதியின் தம்பி, தங்கச்சி படிப்பு செலவையும் ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் முழுவதும் உளுந்தூர்பேட்டை சரஸ்வதியின் கொலை பரபரப்பாக பேசப்பட்டது.. இந்த பெண்ணுக்கு 18 வயதுதான் ஆகிறது.. நர்ஸிங் படித்துள்ளார்.. 21 வயது இளைஞரை காதலித்துள்ளார்.. இருவரும் வேறு வேறு சமூகம்.

வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டது.. அதனால், மகளை குடும்பத்தினர் கண்டித்தனர், அத்துடன் வேறு ஒரு சொந்தக்கார பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்தனர்.

இளம்பெண் சரஸ்வதி கொடூரக் கொலை: நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் இளம்பெண் சரஸ்வதி கொடூரக் கொலை: நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ்

 கொலை

கொலை

இதை கேள்விப்பட்ட அந்த காதலன், நடுராத்திரி சரஸ்வதியிடம் வந்து தகராறு செய்துள்ளார்.. தன் அப்பா, அம்மாதான் முக்கியம், அவர்கள் பேச்சை மீற மாட்டேன் என்று சரஸ்வதி சொல்லவும், ஆத்திரமடைந்து அவரது துப்பட்டாவாலேயே கழுத்தையும் நெரித்து கொன்று, பாத்ரூமிலேயே வீசிவிட்டார்.. பிறகு காதலன் உட்பட 3 பேரை போலீசாரும் கைது செய்துவிட்டனர்.

 அதிர்வலைகள்

அதிர்வலைகள்

ஆனால், சரஸ்வதியின் கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இதில் முதலில் கொந்தளித்ததே டாக்டர் ராமதாஸ்தான்.. நாடக காதல் என்று ஒரு அறிக்கையே வெளியிட்டிருந்தார்.. "காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது.. இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் " என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார்.

 வேல்முருகன்

வேல்முருகன்

இதேபோல, வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் கொந்தளித்தார்.. இந்த கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் அதிக பட்ச தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்க வேண்டும்" என்று கேட்டு கொண்டிருந்தார். இப்படி பல்வேறு தரப்பில் அதிர்வுகளை இந்த கொலை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த சம்பவம் குறித்து அறிந்தார்.

 ஆறுதல்

ஆறுதல்

உடனடியாக, படுகொலை செய்யப்பட்ட சரஸ்வதி குடும்பத்துக்கு உதவும்படி உத்தரவிட்டார்.. அவரது உத்தரவுபடியே, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தா.உதயசூரியன் மற்றும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் ஏ.ஜே. மணிக்கண்ணன் உள்ளிட்ட திமுகவினர் சரஸ்வதி குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னார்கள்.

சரஸ்வதி

சரஸ்வதி

இதையடுத்து, திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராமன், உளுந்தூர்பேட்டை பேரூர் கழக செயலாளர் டேனியல் ராஜ், சங்கராபுரம் பேரூர் கழக செயலாளர் துரை தாகப்பிள்ளை , திருவெண்னை நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் இளைஞரணி நிர்வாகி அருள் உள்ளிட்டோர் சரஸ்வதியின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதுடன், ரூ 50,000 நிதி உதவியும் வழங்கினர். மேலும், சரஸ்வதியின் தம்பி, தங்கை ஆகிய இருவரின் படிப்பை செலவையும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுகவே ஏற்றுக் கொள்ளும் என்றும் சரஸ்வதியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
English summary
DMK consoles Kallakurichi murdered young girl Saraswathis family
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X