சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாண் சட்டம்.. செப்.21 இல் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் தொடர்பான 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். கார்ப்பரேட்டுகளுக்கும் தனியார்களுக்கும் சாதகமானவை. விவசாயத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் அழிப்பவை என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

DMK convenes All party meeting on September 21

இந்த சட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்த சட்டங்களின் பாதகங்கள் குறித்து ஆராய திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வரும் 21-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

DMK convenes All party meeting on September 21

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 21ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்.

ஓபிஎஸ் சொன்ன பார்முலா.. ஏற்க மறுத்த எடப்பாடி தரப்பு.. ஆடிப்போன அதிமுக தலைமையகம்.. இனிதான் ஆட்டமே!ஓபிஎஸ் சொன்ன பார்முலா.. ஏற்க மறுத்த எடப்பாடி தரப்பு.. ஆடிப்போன அதிமுக தலைமையகம்.. இனிதான் ஆட்டமே!

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK convenes All party meeting on September 21 at Anna Arivalayam against to 3 Agricultural amendments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X