சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவின் நீட் நாடக சாயம் வெளுத்தது... சூப்பர் ஸ்போக்ஸ்மேன் ஜெயக்குமாருக்கு பேச தகுதியில்லை -திமுக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக நடத்தும் நீட் நாடகத்தின் சாயம் வெளுத்துவிட்டதால் திமுக நடத்திய போராட்டத்தை அமைச்சர்கள் கொச்சைப்படுத்துவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு தமிழக மாணவர்களுக்குச் செய்துவரும் துரோகப்பட்டியலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் "சூப்பர் ஸ்போக்ஸ்மேன்" அமைச்சர் ஜெயக்குமார் பதில் சொல்லத் தயாரா? என அவர் வினவியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் - ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு என்று முதலில் குரல் கொடுத்தது தி.மு.க. அத்தோடு அந்தத் தேர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றது தி.மு.க.! ஏன், தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் இருந்தவரை அரசுப் பள்ளி மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு உள்ளே நுழையமுடியவில்லை.

என்னென்ன துரோகம்

என்னென்ன துரோகம்

ஆனால் எடப்பாடி திரு. பழனிசாமி முதல்வரானதும் - நெடுஞ்சாண்கிடையாக மத்திய பா.ஜ.க. அரசின் காலில் விழுந்து நீட் தேர்வை அனுமதித்தார். அது அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்த முதல் துரோகம். தேர்வு எழுதப் போன மாணவர்களைக் கம்மலைக் கழற்று, கொலுசைக் கழற்று என்று சித்திரவதைப்படுத்த இடம் கொடுத்தார். அது இரண்டாவது துரோகம். 13 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணமாக இருந்தது மூன்றாவது துரோகம்.

ஸ்டாலின் விமர்சனம்

ஸ்டாலின் விமர்சனம்

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியாமல் கையறுநிலையில் நின்றது எடப்பாடி திரு. பழனிசாமியின் நான்காவது துரோகம். அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை 23 மாதங்கள் மறைத்து - உடனே நிராகரிக்கப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பிச் சட்டமாக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டது ஐந்தாவது துரோகம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதியரசர் திரு. கலையரசன் பரிந்துரையை 7.5 சதவீதமாகக் குறைத்து மசோதாவை நிறைவேற்றியது ஆறாவது துரோகம்.

40 நாட்களுக்கு மேல்

40 நாட்களுக்கு மேல்

அப்படி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவையும் 40 நாட்களுக்கும் மேலாக ஒப்புதலைப் பெறமுடியாதது மட்டுமின்றி - அவர் 3 அல்லது 4 வாரம் கால அவகாசம் கோரியதைத் தமிழக மக்களிடமிருந்து மறைத்தது ஏழாவது துரோகம். அமைச்சர் ஜெயக்குமார் அறியாமையின் முகட்டில் நின்று கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உண்மையிலேயே போராடும் தி.மு.க.வை எள்ளி நகையாட வேண்டாம்!

கால அவகாசம்

கால அவகாசம்

இப்போது சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை வைத்துக் கொண்டு ஆளுநர் கால அவகாசம் கேட்கிறார். அவர் கேட்கும் 4 வாரத்திற்குள் மருத்துவக் கவுன்சிலிங் முடிந்து போகும் சூழல். அ.தி.மு.க.வின் இந்த "நீட் நாடகத்தின்" சாயம் தி.மு.க. போராட்டத்தால் வெளுத்துப் போய் விட்டது என்று தெரிவித்துக் கொண்டு - எங்கள் தலைவர் கூறியது போல் இன்றோ நாளையோ 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு "முதுகெலும்பு" இருந்தால் ஆளுநருக்குக் கெடு விதித்து ஒப்புதலைப் பெறுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

English summary
Dmk Deputy general secretary ponmudi slams minister jayakumar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X