சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 160 முதல் 175 தொகுதிகள் வரை திமுக நேரடியாக களம் காணும் திட்டத்தில் இருக்கிறது.

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை திமுகவிற்கு வாழ்வா, சாவா என்பதால், இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை பகிர்ந்தளித்துவிட்டு ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம்.

அதேவேளையில் தோழமைக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கிற்கு ஏற்ப அந்த கட்சிகளுக்கு உரிய மரியாதை தரப்பட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புஅரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தேர்தல் பணிகள்

தேர்தல் பணிகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால் திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சத்தமின்றி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கடந்த 2011-ல் அதிமுகவிடம் பறிகொடுத்த ஆட்சியை வரும் 2021-ல் மீட்டெடுப்பதற்காக ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை என்றாலும் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.

தொகுதி ஒதுக்கீடு

தொகுதி ஒதுக்கீடு

திமுகவுடன் தற்போதைய சூழலில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தோழமைக் கட்சிகளாக இருக்கின்றன. இந்த தோழமைக் கட்சிகள் அனைத்திற்கும் தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது மிகவும் சவாலான பணி. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசி அவர்களுக்கு எதார்த்த நிலையை உணர்த்துவதற்குள் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் போதும் போதும் என்றாகிவிடும்.

கூட்டணிக் கட்சிகள்

கூட்டணிக் கட்சிகள்

திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பொறுப்பேற்ற பின்னர், தனித்து போட்டியிடலாம் என ஸ்டாலினிடம் அவர் கூறியதாக கொரோனாவிற்கு முன்னர் வாட்ஸ் அப்களில் ஒரு செய்தி உலா வந்தது. இது குறித்து நாம் விசாரித்ததில், அப்படி ஒரு முடிவை ஸ்டாலின் இதுவரை எடுக்கவில்லை என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய கவுரவம் அளித்து கட்சிகளின் வாக்குசதவீதம், மக்கள் செல்வாக்கு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து சீட் ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளார் எனவும் தெரியவந்தது.

வாழ்வா; சாவா

வாழ்வா; சாவா

இதனிடையே இந்த சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு வாழ்வா சாவா என்பதால் 160 முதல் 175 தொகுதிகள் வரை திமுகவே நேரடியாக களமிறங்கும் என்ற தகவலும் நமக்கு கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் அதிக இடங்களில் சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், அதனை அதிமுக ஜாக்பாட்டாக நினைத்து தட்டிச்சென்று ஆட்சியை பிடித்தது என்றும், ஆனால் 2021-ல் அப்படி நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது.

Take a Poll

English summary
dmk directly contest in 160 to 175 constiuency 2021 tn assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X