சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்து முறை இப்படி நடக்க கூடாது.. மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் சொன்ன அறிவுரை.. தயாராகும் திமுக!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை பெற்றது.இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் திமுக கூட்டணி 2338 , அதிமுக 2185, இடங்களில் வென்றது.

இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தற்போது நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்காக திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.

எப்போது நடக்கும்

எப்போது நடக்கும்

பெரும்பாலும் தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதியில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் குறித்து இதில் ஆலோசித்தனர்.

ஊரக உள்ளாட்சி

ஊரக உள்ளாட்சி

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்ட செயலாளர்கள் சரியாக செயலாற்றவில்லை என்ற புகார் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இதனால் சில மாவட்ட தலைவர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். இதனால் நேரடியாக அந்த மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் இன்று மீட்டிங்கின் தொடங்கத்திலேயே கேள்வி எழுப்பினார் என்கிறார்கள். சரியாக பணியாற்றதவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார். நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் எல்லோரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

விஷயம்

விஷயம்

அதேபோல் இதில் இன்னும் சில விஷயங்களை குறித்தும் விவாதித்து உள்ளனர். கட்சிக்குள் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்த சில மாற்றங்களை செய்ய இருக்கிறார்கள். முக்கியமான நபர்களின் பதவிகளை மாற்ற உள்ளனர். புதிய நபர்கள் சிலருக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. புதிதாக நிறைய பணிகள் உருவாக்கப்பட உள்ளது. கட்சிக்குள் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடக்கும் என்றும் கூறுகிறார்கள்.

Recommended Video

    செய்தி தெரியுமா | 18-02-2020 | Oneindia tamil Morning news
    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    இது தொடர்பாகவும் இன்று ஆலோசனை செய்து உள்ளனர். அதேபோல் திமுக கட்சிக்குள் முக்கிய பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தல் குறித்தும் விவாதித்து இருக்கிறார்கள். இந்த தேர்தலுக்கு பின் திமுக சட்டசபை தேர்தலுக்கான தயாராக தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டசபை தேர்தலுக்காக ஏப்ரலில் இருந்தே திமுக பணியாற்ற தொடங்க உள்ளது.

    English summary
    DMK District Secretaries meeting: M K Stalin gets angry with few for their work in local body elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X