சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மா.செ.க்கள், எம்எல்ஏக்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ஸ்டாலின் நடக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை : திமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்துகிறார்.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீர்ப்புக்கு பிறகு இந்த ஆட்சி ஆளும் கட்சி தரப்பு கவிழுமா, நீடிக்குமா என்ற சந்தேகமும் கூடவே எழுந்துள்ளது.

[18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்றால் எடப்பாடி அரசு தப்புமா? சட்டசபை பலம் என்ன?]

ஆட்சியில் மாற்றம்?

ஆட்சியில் மாற்றம்?

ஏனெனில் அதிமுகவுக்கு பாதகமாகவே தீர்ப்பு வழங்கப்படும் என்றும், தீர்ப்புக்கு பின்னர் ஆட்சியின் முடிவில் மாற்றம் ஏற்படும் என்றும் சமீபத்தில்கூட ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார்.

விவாதம் நடத்தப்படும்

விவாதம் நடத்தப்படும்

அதேபோல, கடந்த 17ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வந்தால் அதை சந்திப்பது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டதாக ஏற்கனவே ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

அதற்காக கடந்த 4 தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் இது சம்பந்தமாக அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி கழக பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் ஆலோசனை

தேர்தல் ஆலோசனை

இந்நிலையில்தான் இன்று திமுக தரப்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அறிவாலயத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையும் நடத்த உள்ளார். எம்எல்ஏக்களின் தீர்ப்பு மற்றும் எதிர்கொள்ள போகும் நாடாளுமன்ற உள்ள தேர்தலுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என தெரிகிறது.

English summary
DMK District Secretaries meeting today in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X