சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டக்குனு போனை போட்டு.. எடப்பாடியார் சொன்ன "அந்த" வார்த்தை.. கலங்கி போயுள்ள நிர்வாகிகள்.. என்னாச்சு?

எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஏன் அந்த ஒரு வார்த்தை சொன்னார்? வரப்போகும் தேர்தலில் அதிமுகவின் முடிவு எப்படி இருக்கும் என்ற ஒருவித எதிர்பார்ப்பு அதிமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளதாம்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தது.. திமுகவுக்கு வேலை செய்ய வந்திருந்த ஐபேக் டீமின் பணியும் நிறைவடைந்தது.. கடந்த வாரம் பிரசாந்த் கிஷோர் ரிப்பப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.

புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்

அதில், "எல்லாம் நல்லபடியாக முடிந்தது.. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக களமாடிய மொத்த கட்சிகளும் 50 தொகுதிகளில்கூட வெற்றிபெறாது.. திமுக அமோக வெற்றி பெறும்" என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

குஷி

குஷி

எந்த நம்பிக்கையில் பிரசாந்த் கிஷோர் இப்படி சொன்னார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், திமுக தரப்பில் இந்த வார்த்தைகள் மிகுந்த குஷியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. அதேநேரம், கிணற்றில் போடப்பட்ட கல்லாக அதிமுக காணப்படுவதாக கூறுகிறார்கள். என்ன ஏதென்று நாம் சிலரிடம் நிலவரம் விசாரித்தோம். அவர்கள் நமக்கு அனுமானத்தில் சொன்னதாவது:

 மாமியார்

மாமியார்

ஓபிஎஸ் மாமியார் மறைவுக்கு, முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.. இதற்கு பிறகுதான் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளை போன் போட்டு, சென்னை வீட்டிற்கு நேரில் வரவழைத்துள்ளார்.. அதாவது கடந்த 10-ம்தேதியே ஒரு குட்டி ஆலோசனையை நடத்தியதாக தெரிகிறது. அதன்படியே சில அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆஜர் ஆகி உள்ளனர்.

 அமமுக

அமமுக

தேர்தலன்று தன்னுடைய சிலுவம்பாளையம் வீட்டில், வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்த நிலையில், இது 2வது முறையாக ஆலோசனை நடத்தி இருக்கிறார்.. அப்போது, பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வரிடம் புலம்பி தள்ளிவிட்டார்களாம்.. "தேர்தல் களத்தில் திமுகவை சமாளிப்பதைவிட, அமமுக வேட்பாளர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது.. அதிலும் ஓபிஎஸ் தொகுதியிலும் இப்படித்தான் இருந்தது. திமுகவுக்கு சாதகமான சூழலும் ஆங்காங்கே நிலவுகிறது" என்று சொல்லி உள்ளனர்.

 கருத்துக்கள்

கருத்துக்கள்

இப்படி ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாகவே அவரவர் தொகுதியை பற்றி பேசவிட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார்.. எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டவர் இறுதியில், "எப்படியும் 120 தாண்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.. நீங்களும் தைரியமா இருங்க.. வெற்றியோ தோல்வியோ, நமக்கு கட்சி முக்கியம்" என்று சொல்லி இருக்கிறார்.. இதுதான் நிர்வாகிகளுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது..

வார்த்தை

வார்த்தை

அதிமுக நிர்வாகிகளிடம் எப்போது ஆலோசனை செய்தாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கியமாக அந்த நேரங்களில் சொல்வது, "நம்முடைய கட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது.. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. அடுத்தும் நம்ம ஆட்சிதான்.. அனைவரும் சகோதரர்களாக இருந்து களப்பணியாற்ற வேண்டும்" என்று நிர்வாகிகளிடம் சொல்வது வழக்கமான ஒன்றுதான்.

குழப்பம்

குழப்பம்

இருந்தாலும், தேர்தல் முடிவு சமயத்தில், வாக்குப்பதிவை கொண்டும், தனக்கு வந்த ரிப்போர்ட்களை கொண்டும் முதல்வர் இவ்வாறு நம்பிக்கை வார்த்தைகளை சொன்னாலும், அந்த கடைசி வார்த்தையை இப்போது ஏன் சொன்னார்? "கட்சி முக்கியம்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல காரணம் என்ன? என்று மண்டை காய்ந்து போயுள்ளார்களாம். இருந்தாலும், தேர்தல் முடிவு சமயத்தில் முதல்வர் சொன்னதுதான் குழப்பமாகி

English summary
DMK: Edapadi Palanisamy discussed with ADMK Ministers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X