சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள், இல்லதரசிகள், அரசு ஊழியர்களின் மனங்களை குளிர்விக்கும் திமுக தேர்தல் அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்

    சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்றும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டமே என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழகத்தில் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விவகாரங்கள் அவை தலைநகர் டெல்லிக்கே சென்று விவசாயிகள் நடத்திய போராட்டம், நீட் தேர்வினால் அடுத்தடுத்த மாணவர்கள் தற்கொலை.

    இந்த பிரச்சினைகளுக்கு மத்திய அரசு ஒரு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்கிறது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

    ரத்து

    ரத்து

    இந்த நிலையில் ஏற்கெனவே வடமாநிலங்களில் நடத்தப்பட்ட சில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அரசு விவசாயிகள் கடனை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து இனி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்தார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    எனவே விவசாயிகள் கடனை ரத்து செய்வதும், நீட் தேர்வை ரத்து செய்து தமிழக மாணவர்களின் மனதில் பாலை வார்க்கும் அறிக்கைகளை ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயம்

    இதனிடையே ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கைகளை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அமைக்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். நீட் தேர்வுகள் ஒழிக்கப்படும்.

    பழைய ஓய்வூதிய திட்டம்

    பழைய ஓய்வூதிய திட்டம்

    சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டு பழைய முறையே கொண்டு வரப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமே கொண்டு வரப்படும் என்றார்.

    குளிர வைத்த தேர்தல் அறிக்கை

    குளிர வைத்த தேர்தல் அறிக்கை

    திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்கும் என்று ஸ்டாலின் சொன்னதற்கேற்ப இன்று அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையால் விவசாயிகள், மாணவர்கள், இல்லத்தரசிகள், அரசு ஊழியர்கள் என முக்கியமான தரப்பினரின் மனங்களை குளிர செய்துவிட்டார்.

    English summary
    DMK releases election manifesto 2019 and it satisfies students, farmers, government staff and middle class families.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X