சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    Chennai Girl SubaShree : திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வேண்டாம்..! மு.க.ஸ்டாலின் உத்தரவு-வீடியோ

    சென்னை : கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்

    பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    DMK files affidavit in banner case

    மேலும், சட்டவிரோத பேனர்களை வைக்க மாட்டோம் என அனைத்து கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர்கள் நீலகண்டன் மற்றும் ரிச்சர்ட் வில்சன் நீதிபதிகளிடம் முறையிட்டனர்.

    போட்டு வைத்த லீவு திட்டம்.. கேன்சல் கண்மணி.. காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து.. மாணவர்கள் ஏமாற்றம்!போட்டு வைத்த லீவு திட்டம்.. கேன்சல் கண்மணி.. காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து.. மாணவர்கள் ஏமாற்றம்!

    அப்போது, கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள்,கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

    அதில், சட்ட விரோத பேனர்கள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும்
    நீதிமன்ற உத்தரவை தங்கள் கட்சி பின்பற்றுவது மட்டுமல்லாமல் பிற கட்சியினர் சட்ட விரோதமாக பேனர்கள் வைத்ததை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்ததையும் குறிப்பிட்டு உள்ளன.

    2017 ஜனவரி மாதமே அப்போது கட்சியின் செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் பேனர்கள் வைக்ககூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

    English summary
    DMK has filed an affidavit in banner case in Madras HC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X