சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்

    சென்னை: திமுக முன்னாள் எம்பியும் பத்திரிகையாளருமான வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 56.

    திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோந்தெடுக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை எம்பியாக பணியாற்றியவர் வசந்தி ஸ்டான்லி.

    DMK former MP Vasanthi Stanley dead

    வசந்தி ஸ்டான்லி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவர் கனிமொழியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவருடைய மரணம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பிறந்தவர் வசந்தி ஸ்டான்லி. சட்டம் பயின்ற அவர், திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

    குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்ததால் 2 இயக்கங்களுக்கு தடை.. இலங்கை நடவடிக்கை குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்ததால் 2 இயக்கங்களுக்கு தடை.. இலங்கை நடவடிக்கை

    வசந்தி ஸ்டான்லி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு" என பதிவிட்டுள்ளார்.

    English summary
    DMK Formet MP Vasanthi Stalin expired due to Illness in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X