சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதயநிதியின் கையை பிடித்து வாழ்த்திய "தாத்தா" அன்பழகன்.. அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு!

உதயநிதியின் கையை பிடித்து வாழ்த்து கூறினார் பேராசிரியர்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக இளைஞர் அணி இனி உதயநிதி ஸ்டாலின் வசம்!- வீடியோ

    சென்னை: பதவி வாங்கின கையோடு பேராசிரியர் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்தையும் பெற்றுவிட்டார் உதயநிதி ஸ்டாலின்!

    திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் வயோதிகம் காரணமாக சிகிச்சை மற்றும் ஓய்வில் உள்ளார். கருணாநிதியின் நீண்ட கால நெருங்கிய நண்பர் அன்பழகன். கருணாநிதியை விட ஒரு வயது மூத்தவரும்கூட.

    கருணாநிதி திமுக தலைவரானதில் இருந்தே, அவருடனேயே பயணித்தவர். கருணாநிதியின் வீட்டு கல்யாணம் முதல் எந்த சுப காரியங்கள் ஆனாலும் அவை எல்லாமே பேராசிரியர் தலைமையில்தான் நடக்கும். ரொம்ப நாள் பார்க்காமல் திடீரென பேராசிரியரை சந்தித்தால் கருணாநிதி - அன்பழகன் கையில் முத்தம் தருவார்.

     நேரில் வாழ்த்து

    நேரில் வாழ்த்து

    "கண்களிலே நீர்பெருக கலங்கி நின்றபோது கை கொடுத்தவர்" என்று பலமுறை அன்பழகனை பாராட்டி இருக்கிறார். கருணாநிதி மறைந்து, ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றதும், முதலில் ஆசி வாங்கியது அன்பழகனிடம்தான். அதுபோலவே இப்போது உதயநிதியும் அன்பழகனை நேரில் சந்தித்து ஆசி வாங்கி உள்ளார்.

    உதயநிதி

    பொதுச்செயலாளர் என்ற முறையிலான சந்திப்பு என்று மட்டும் இதை எடுத்து கொள்ள முடியாது. உதயநிதி பிறந்தது முதல் அனைத்தையும் பார்த்து பூரித்து போன தாத்தா என்ற முறையில் கூட இருக்கலாம். இதைதான் உதயநிதியும் தனது ட்வீட்டில் சொல்லி உள்ளதாவது:

    தாத்தா

    தாத்தா

    "மாபெரும் மக்கள் இயக்கமாம் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் என்ற இணையற்ற பொறுப்பை எனக்கு வழங்கிய கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கும், பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை தாத்தா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

     கையை பிடித்தார்

    கையை பிடித்தார்

    கண்ணாடி அணியாத அன்பழகன் படுக்கையில் படுத்து உள்ளார். அவரை மஞ்சள் சால்வையுடன் சந்தித்து ஆசி வாங்கினார் உதயநிதி. பேராசிரியரால் பேச முடிந்ததா, என்ன பேசினார், எப்படி வாழ்த்து சொன்னார் என்று நமக்கு தெரியாவிட்டாலும், உதயநிதியின் கையை அழுத்தமாக பிடித்துள்ளதில் நமக்கு ஆயிரம் அர்த்தம் விளங்குகிறது.

    பழகிக்கொள்

    பழகிக்கொள்

    "கட்சியை பலப்படுத்து, திராவிட இயக்கத்தை பழகி கொள், எதையும் தாங்கும் இதயம் கொள், தாத்தாவைபோல அரசியலில் நாடு போற்ற விளங்க வேண்டும், தகுதிகளை மேம்படுத்திக் கொள்" என்று இவைகளில் எதுவேனாலும் அங்கு அரங்கேறி இருக்கலாம். அப்படித்தான் விளங்கி கொள்ள முடிகிறது அன்பழகனின் கைக்குள் உதயநிதியின் கை பொதிந்து இருப்பதை பார்த்தால்!

    English summary
    DMK Party General Secretary and Senior Leader Perasiriyar Anbazhagan wishes Udhayanidhi Stalin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X