ரவுண்டு கட்டிய போட்டோகிராபர்கள்! ஏன் இப்படி? ஒரு போட்டோ போதும்பா! வெட்கத்தில் சிரித்த துரைமுருகன்!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனை அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் வளைத்து வளைத்து படம் பிடித்தனர்.
ஏன் இப்படி என அவர்களை நோக்கி தனது கைகளால் சைகை காட்டிய அவர், ஒரு புகைப்படம் எடுத்தாம் போதுமே எனக் கூறியதுடன் வெட்கத்தில் சிரித்தார்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இதேபோல் மேடையில் முதல்வர் ஸ்டாலின் அந்தப் பக்கம் திரும்பிய போது, சார் சார் எனக் கோரஸாக குரல் எழுப்பி அவரையும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்த நிகழ்வு நடந்தது.

மாவட்டச் செயலாளர்கள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் அங்கு படம் பிடித்துக்கொள்ள 5 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பளிச் பளிச் என பிளாஷ் போட்டு படங்களை எடுத்த போட்டோகிராபர்கள் மேடையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரையும் படங்கள் எடுத்தனர்.

வளைத்து வளைத்து
அப்போது நேரமாகிவிட்டது வாருங்கள் என திமுக தலைமை நிலையச் செயலாளரும், வீட்டுவசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் அவர்களை வெளியேறுமாறு அழைப்பு விடுத்தார். ஆனாலும் மேடையை நோக்கி வளைத்து வளைத்து சிலர் படமெடுக்க, அப்போது ஏன் இப்படி ஒரு படம் போதுமே என்கிற வகையில் கரங்களால் சைகை காட்டினார் துரைமுருகன். ஆனால் அப்போதும் விடுவமா நாங்கள் என்கிற வகையில் துரைமுருகனை ரவுண்டு கட்டினர். இதனால் அவரே வெட்கப்பட்டு சிரித்த நிகழ்வும் நடந்தது.

சார் சார்
இதேபோல் வழக்கமாக சிரித்த முகத்துடன் காணப்படும் முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சற்று இறுக்கமாக இருந்தார். வலது பக்கமும், இடது பக்கமும் அவர் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரையும் போட்டோகிராபர்கள் விடவில்லை. சார் சார் ப்ளீஸ் எனக் கூப்பிட்டு முதல்வரையும் போஸ் கொடுக்க வைத்தார்கள்.

ஸ்டாலின் கடுமை
இதனிடையே கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் நாற்காலிகளில் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த மாவட்டச் செயலாளர்கள் பலரும், ஸ்டாலினின் கோபம் கொப்பளிக்கும் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நிமிர்ந்து அமர்ந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை இவ்வளவு தூரம் ஸ்டாலின் கோபப்பட்டதை கண்டு கூட்டம் முடிந்த பின்னரும் பலருக்கும் அதிர்ச்சி விலகவில்லை.