சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு LIVE BREAKING: தகனம் செய்யப்பட்டது அன்பழகன் உடல்

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு காலையில் இருந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடலுக்கு காலையில் இருந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் அதிகாலையில் காலமானார். அதிகாலை 1 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். வயோதிகம் மற்றும் பல்வேறு நோய் குறைபாடுகளால் அன்பழகன் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மாலையில் இருந்து அவரின் உடல் அவசர சிகிச்சையை ஏற்க மறுத்த நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகனின் மறைவையொட்டி பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.அன்பழகன் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Newest First Oldest First
5:45 PM, 7 Mar

அன்பழகன் உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டதும், ஸ்டாலின், துரைமுருகன் கண்ணீர்
5:30 PM, 7 Mar

திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனின் இறுதி ஊர்வலம் மின் மயானத்தை அடைந்தது
4:15 PM, 7 Mar

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இறுதி ஊர்வலம் துவங்கியது
10:40 AM, 7 Mar

அன்பழகன் மறைவு பெரிய இழப்பு - ரஜினி
10:24 AM, 7 Mar

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதுகாத்த மாவீரர் - வைகோ இரங்கல்
10:24 AM, 7 Mar

திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய போர்வாள்
10:24 AM, 7 Mar

அன்பழகன் மறைவு உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது - வைகோ
10:24 AM, 7 Mar

தமிழகத்தின் முதுபெரும் தலைவர் க அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது- கமல்ஹாசன்
10:24 AM, 7 Mar

அவரது குடும்பத்தினருக்கும் இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்- கமல்
10:23 AM, 7 Mar

க.அன்பழகன் மறைவையடுத்து திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
10:23 AM, 7 Mar

மறைந்த திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம்
10:23 AM, 7 Mar

உடல்நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகன் காலமானார்
10:23 AM, 7 Mar

கீழ்ப்பாக்கம் அருகே வேலங்காடு இடுகாட்டில் அன்பழகனின் உடல் தகனம் செய்யப்படுகிறது
10:23 AM, 7 Mar

திராவிட இயக்கம் சாய்ந்துவிட்டது ; சங்கப்பலகை சரிந்துவிட்டது
10:23 AM, 7 Mar

இனப்பால் -மொழிப்பால் -கழகப்பால் ஊட்டி வளர்த்தார் பெரியப்பா பேராசிரியர்
10:23 AM, 7 Mar

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கற்பா
10:22 AM, 7 Mar

அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்
10:22 AM, 7 Mar

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு டாக்டர் ராமதாஸ் இரங்கல்
10:22 AM, 7 Mar

மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர் பேராசிரியர் அன்பழகன் - ராமதாஸ்
10:22 AM, 7 Mar

திமுக நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படும் -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
10:22 AM, 7 Mar

திமுக கொடி 7 நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கம் -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
10:22 AM, 7 Mar

சமூக நலம், சுகாதாரம், நிதி, உள்ளிட்ட துறைகளின் அமைச்சச்சராக இருந்திருக்கிறார் அன்பழகன்
10:22 AM, 7 Mar

பேராசிரியர் அன்பழகனின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஆகும்
10:22 AM, 7 Mar

43 ஆண்டுகாலம் திமுக பொதுச்செயலாளராக இருந்தார் பேராசிரியர் அன்பழகன்
10:21 AM, 7 Mar

ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்; 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்
10:21 AM, 7 Mar

கடந்த 24-ம் முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்
10:21 AM, 7 Mar

இன்று(07-03-2020) அதிகாலை 1 மணியளவில் பேராசிரியர் அன்பழகனின் உயிர் பிரிந்தது
10:21 AM, 7 Mar

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் காலமானார்

DMK General Secretary K Anbazhagan Death LIVE UPDATES
English summary
DMK General Secretary K Anbazhagan Death: Condolences Pours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X