சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வேளை திமுகவுக்கு பாஜக அமைச்சரவையில் இடம் கிடைச்சா.. என்ன தருவாங்க?

Google Oneindia Tamil News

சென்னை: மத்தியில் யார் ஆட்சியைப் பிடித்தாலும் திமுகவுக்கு இந்த முறை கணிசமான கேபினட் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் 23-ஆம் தேதிக்கு பிறகே தெரியும் என ஸ்டாலின் பொடி வைத்து பேசினார். இதன்மூலம் நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை வைத்து கணிசமான அமைச்சர் பதவிகளை திமுக அள்ளும் எனத் தெரிகிறது.

தனி அறை.. விருந்துக்கு பின் மீட்டிங்.. அமித் ஷா உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்.. ஏன்? தனி அறை.. விருந்துக்கு பின் மீட்டிங்.. அமித் ஷா உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்.. ஏன்?

5 அமைச்சர்கள்

5 அமைச்சர்கள்

கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக தமிழகத்தில்18 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மத்தியில் அமோகமாக வெற்றி பெற்றது. இதையடுத்து திமுகவை சேர்ந்த முக அழகிரி, எஸ்எஸ் பழனிமாணிக்கம், எஸ் காந்தி செல்வன், எஸ் ஜெகத்ரட்சகன் ஆகிய 5 பேர் கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்கள்

மத்திய அமைச்சர்கள்

அதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சிக்கு 3 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டது. அதன்படி டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் மற்றும் ஆ ராசா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.

20 இடங்கள்

20 இடங்கள்

அது போல் இந்த முறை திமுக போட்டியிட்ட 20 இடங்களில் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் நிச்சயம் கடந்த 2009-இல் பெற்றது போல் 5 அமைச்சர் பதவிகளையோ அல்லது அதை விட கூடவோ கிடைக்கலாம் என தெரிகிறது. அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் கனிமொழிக்கு ஒரு முக்கிய இலாகா உண்டு என்றே தெரிகிறது.

பதவிகள்

பதவிகள்

கனிமொழிக்கு அமைச்சர் பதவியோ இல்லை அதற்கு இணையான வேறு சில பதவிகளோ கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுதிறது. இது காங்கிரஸ் ஆட்சி அமைக்க மட்டுமில்லை. பாஜக ஆட்சி அமைக்க திமுகவின் ஆதரவு தேவைப்பட்டாலும் இத்தனை கேபினெட் பதவிககள் வேண்டும் என திமுக பேரம் பேசும் என்றே தெரிகிறது.

English summary
DMK will definitely fight to get cabinet minister posts from Centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X